32. நெருப்பை மூட்டி, நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே
விருப்படுமாடு நீர் குளிக்கும், வேதவாக்யம் கேளுமின்.
நெருப்பும், நீரும் உம்முளே, நினைத்துக் கூற வல்லிரேல்?
சுருக்கமற்ற சோதியை, தொடர்ந்து கூடலாகுமே!
இறைவனை உணர்ந்து, அவன் பாதங்களைப் பற்றி , அவனைப் பற்றி , தன் சந்ததிகளுக்குக் கடத்த சில செயல் முறை வடிவங்களை, உருவாக்கி, அதன்மூலம் இறைவனை குழந்தை பருவத்தினர்க்கு உணர்த்த முயற்சித்தார்கள். அதையே சிலர் சடங்குகளாகவும், சம்பிரதாயங்களாக்கி வியாபாரமாக்கிக் கொண்டார்கள். பின்வரும் பாடல்களில் அவர்களுக்கு அதன் அர்த்தங்களைச் சொல்கிறார். நெருப்பை மூட்டி நெய்யை விட்டு, நித்தம், நித்தம் நீரிலே நீங்கள் குளிக்கும் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள் என சொல்கிறார். நெருப்பு எப்பொழுதும் மேலெழந்து , கொழுந்து விடும். அதே போல் நம் உடல் சூடு இருக்கும் வரை தான் எழுந்து நடமாட முடியும். அதே போல் நீரும் , சூடும் சேர்ந்துதான் உடலை வளர்த்தெடுக்கிறது, கர்ப்பபையில். அது நம்முள்தான், சாகும் வரை இருக்கிறது. அதை நினைத்துக கூற வல்லீரேல், இறைவனாகிய சுருக்கமற்ற சோதியை நாம் உணர்ந்து , தொடர்ந்து கூடி இருக்கும் அனுபவம் உண்டாகும்.
Tags: சிவவாக்கியம்
No Comments