31. அண்டர் கோன், இருப்பிடம், அறிந்து உணர்ந்த ஞானிகள்.
பண்டறிந்த பான்மை தன்னை , யார் அறிய வல்லரோ?
விண்ட வேத பொருளையன்றி, வேறு கூற வகையில்லா?
கண்ட கோயில் தெய்வமென்று , கை எடுப்பதில்லையே!,
இதுவரை 30 பாட்டுக்களைப் பார்த்து விட்டோம். 30-வது பாட்டில் , பண்டு நான், பறித்தெறிந்த பண்மலர்கள் எத்தனை? என்ற வரிகளில் பண்டு என்றால் பண்டம் ஆகிய பொருள். அதாவது அருவமாக இருந்த நான் உருவமாக அதாவது பண்டமாகிய , நான் என்று அர்த்தம். இறைவனை நாடி பறித்தெறிந்த பண் மலர்கள் என்றால், ‘இசை வடிவம் தான் பண். இறைவனை , உணர்ந்து , முடிந்தவரை , அதை வார்த்தைகளாக்கி,, அவரைப் பற்றி விளக்க, இசை வடிவத்தில் பாடல்களாக பாடுவது , அன்றைய வழமை. ஆனால் இன்று , தமிழ் மொழியில் படிப்பதே அவமானம், என்ற மாயையை, இன்றைய ஆட்சியாளர்களால், உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதையும் கடந்து தமிழ் நிற்பது, இறையின் அருள்தான். அப்படி அண்டர்கோன் என்றால் இந்த அண்டத்தின் தலைவனின் இருப்பிடம், அறிந்துணர்ந்த ஞானிகள், அதை விளக்க , அந்தப் பொருளை அறிந்த ஞானிகளின் மான்பு , அதை விளக்கி மற்றவர்களுக்குச் சொன்ன பான்மையை யார் அறிய வல்லரே, அவர்கள் இறைவனை அறிந்து கொள்வார்கள் என்கிறார். கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து , 4 வேதியல்களை , சொன்ன விண்ட வேத , உண்மையான அர்த்தங்களைச் சொல்லமுடியாமல், வேறு வழியில்லாமல், மாற்றுக் கருத்துக்களைக் கூறும் இடங்களாகி விட்ட , கோயில்களில் நான் கையெடுத்துக் கும்பிடுவதில்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments