29. அண்ணலே அனாதியே, அனாதி முன் அனாதியே!
பெண்ணும், ஆணும் ஒன்றலோ, பிறப்பதற்கு முன்னெலாம்.
கண்ணில் ஆணின் சுக்கிலம், கருவில் ஓங்கும் நாளிலே!
மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாற தெங்கனே.?
தாயின் கருவறையில் , கருமுட்டையாகவும், தகப்பனின் விறை அறையில் , சுக்கிலமாகவும், இருக்கும் வரை , அது ஆணாகவும், பெண்ணாகவும் , பிரிக்க முடியாது. அது உயிர் . பெண்ணும், ஆணும் ஒன்றலோ? பிறப்பதற்கு முன்னெலாம். ஆனால் கருவறைக்கு , கண்ணின் வழியாக ஆணின் சுக்கிலம், கருமுட்டையை அடையும் போதுதான், அது ஆணாகவோ? அல்லது பெண்ணாகவோ? உரு எடுக்கிறது. இதை அனாதி முன் அனாதியான இறைவனிடம், பேசுவது போல பாடலை அமைத்து இருக்கிறார். ஐம்பூதங்களை ஆதி என்கிறார். இறைவனை அனாதி என்கிறார். அப்படி என்றால் இறைவன் எந்த எழுத்தில் மறைந்துள்ளார், எப்படி இருக்கிறார். வரும் பாடல்களில் விளக்குவாரா? இப்படி ஆண், பெண்ணாக, மண்ணின் மேல் இருப்பவர்களும், இறந்து விண்ணில் ஆவிகளாக இருப்பவர்களும் எப்படி பிறப்பெடுத்தார்கள். விடை சொல்வாரா? ஆணாகவும், பெண்ணாகவும் எப்படி மாறினார்கள்?
Tags: சிவவாக்கியம்
No Comments