ஓடமுள்ள போதெல்லாம், ஓடியே உலாவலாம்.
ஓடமுள்ள போதெல்லாம் உறுதி பண்ணிக் கொள்ளலாம்.
ஓடம் உடைந்த போது , ஒப்பில்லாத நாளிலே !
ஆடுமில்லை கோளுமில்லை , யாருமில்லை ஆனதே!,
இந்த உடல் எனும் ஓடம் உள்ள போது தான், நாம் இந்த உலகில் அனைத்தையும் அனுபவித்து, ஓடி உலாவ முடியும். இந்த உடல் இருக்கும் வரைதான், இந்த அண்டத்தையும், இந்த நம் உடல் அமைப்பையும், உணர்ந்து, இறைவனையும், அறிந்து நம் பிறப்பில்லா, இறப்பில்லா, சித்தி , முத்தி என நம் அடுத்த பிறப்பை பற்றி உறுதி பண்ணிக் கொள்ளலாம். இந்த ஓடம் (உடல்) உடையும் அந்த ஒப்பற்ற நாளிலே, நாம் மேய்க்க ஆடுகள், நம் கையில் ஆடுகளை முடுக்க கோல், எதிரில் யாரும் இருக்க மாட்டார்கள்.
Tags: சிவவாக்கியம்
No Comments