26. நீள வீடு கட்டுவீர், நெடுங்கதவு சாத்துவீர்,
வாழ வேண்டும் என்றலோ, மகிழ்ந்திருந்த மாந்தரே!
காலன் ஓலை வந்தபோது , கை கலந்து நின்றிடும்.
ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மை பாதம் , உண்மையே.
இறைவன் உயிர்களைப் படைத்து , அதில் மாயை எனும் ஒன்றையும் சேர்த்து உயிர்களுக்கு கொடுத்ததால் தான், உலகம் இவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருந்தால், உலகம் ., இவ்வளவு விறு விறுப்பாக , இயங்காது. அவரவர்கள், நாம் நினைப்பது தான் சரி, அது தவறு என இருப்பதால் தான், உலகம் இன்ப துன்பங்கள் என இரு வினைகளால் , நிறைந்துள்ளது. உண்மையில் , இரு வினைகள் கிடையாது , அவை மாயை என்று , எல்லோருக்கும் புரியாது . அது யாருக்கு புரிகிறதோ, அதை நடைமுறையில் யார் உணர்கிறார்களோ அவர்கள் தான் ஞானிகள். ஆலம் உண்ட கண்டர் பாதம், அம்மை பாதம் உண்மையே.
பின்வரும் மூன்று பாடல்களும், உங்களுக்கே புரியும். நம் உடல், உயிர் அற்றுப் போகும் போது, வீட்டுக் கூறையில் உள்ள ஓட்டின் விலை கூட பெறாது என்கிறார். அதே போல் இந்த உடல் , உயிருடன் இருக்கும் போதே, பிறவா வரம், முக்தி, சித்தி , என அனைத்தையும் , அறிந்து , அதை அடைந்து உறுதி பண்ணிக் கொள்ள வேண்டும் என்கிறார். இல்லா விட்டால். யமன் வரும்பொழுது, அவனுடன் சண்டையிட்டு, மீண்டும் இவ்வுலகில். பிறந்து இரு வினைகளால் , அல்லலுறுவோம் என்கிறார் சிவவாக்கியர்.
Tags: சிவவாக்கியம்
No Comments