25. அஞ்சும், அஞ்சும், அஞ்சுமே, அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சு பிஞ்சதல்லவோ, பித்தர்காள், பிதற்றுவீர்.
நெஞ்சில் அஞ்சு கொண்டு நீர், நின்று தெரக்க வல்லீரேல்!
அஞ்சும் இல்லை ஆறும் இல்லை அனாதியாகத் தோன்றுமே!
சத்தம் அதாவது ஒலி என்பதை மணி (Bell ) என்று தான் சொல்வோம். அதாவது மணி அடித்தால் சோறு. அதேபோல் மணி(time) என்றுதான் காலத்திற்கும் சொல்வோம். (மணிப்பூரகம்.) அந்த நாதம் உருவான பின் தான் காலம் தோன்றியது. அதிலிருந்துதான், வெளி, காற்று, வெப்பம், எனும் ஆதி தேவர்கள் தோன்றினார்கள். இந்த நாதம் தான் அதிர்வலைகளாக அண்டமெங்கும் பரவி, தகவல்களாகவும் அனைத்துமாகவும் ஆகின்றது. Freeuency என்பது அதிர்வுதான். அதில் ஓவியானது 0-20 kHz வரையில் நம் காதுகளுக்குக் கேட்கக் கூடியனவாக இருக்கும். அதற்குமேல் காந்தப் புலங்களை அதிரச் செய்து மின்காந்த அலைகளாக உலகெங்கும் வலம் வரும். இப்படி இந்த அதிர்வுகள் ஒரு கட்டத்துக்கு மேல் வெப்பமாகி, அதற்கும் மேல் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும். இப்படி அதிர்விலிருந்து பிறந்த அஞ்சும் (ஐம்பூதங்கள்) அஞ்சும் (ஐம்புலன்கள்) அஞ்சும் (ஐந்து எந்திரங்கள், கை, கால், வாய். எருவாய். மலவாய்) இவை அனைத்தும் அனாதியில் இருந்து வந்ததே!, இவை தனித்தனியாக பிய்ந்து, பிய்ந்து இருப்பதல்ல. இவற்றைப் பிரித்து பிரித்து தனித்தனியாக நினைத்துக் கொண்டு பிதற்றுகிறீர்களே பித்தர்காள். நீங்கள் நெஞ்சிலே ஐந்தையும் நான்றாக புரிந்து கொண்டு தொடர்ந்து, ஆழ் மனதில் தொக்க வல்லீரேல்! அது – அந்த ஐந்தும் இல்லை ஆறும் இல்லை அனாதியாகத் தோன்றுமே.
இந்த 5 ம் 5ம் 5 எப்படி விண்ணியல் கணக்கில் பொருந்தி வருகிறது, என பார்க்கலாம். நம் பூமியில் நம் கண்களுக்கு தெரியும் தொடு வானத்தின் தூரம் 55.5km. பூமியின் ஒரு திகிரி தூரம் 111 km , கலிகாலம் 5000 வருடங்களைக் கொண்டது. என திருக்குறளில் வரும் இன்பத்துப் பாலின் அதிகாரங்கள் 25. 250 பாட்டுக்கள். 250 x 20 வீடுகள் = 5000 வருடங்கள். இந்த 5000 வருடங்களில் சூரியன் கடப்பது 3 ராசிகளை. அது 30 x 3 = 90 திகிரி. அப்படியானால் 5000/ 90. = 55.5 வருடங்கள். நம் ரத்தத்தின் அளவான அழுத்தம் 55.5 .
Tags: சிவவாக்கியம்
No Comments