24. அஞ்செழுத்திலே பிறந்து, அஞ்செழுத்திலே வளாந்து,
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்ச பூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஒரெழுத்து அறிந்து கூற வல்லீரேல்!
அஞ்சல், அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.
வெளி ய , காற்று வா, வெப்பம் சி , நீர் ம , நிலம் ந , எனும் ஐம்பூதங்களைக் கொண்டு பிறந்து, இந்த ஐம்பூதங்களில் வளர்ந்து, இந்த ஐந்தெழுத்தை அர்த்தம் புரியாமல் ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள். நாதன் என்றாலே சப்தத்தை அறிந்தவன், படைத்தவன் எனும் பொருள். அந்த சப்தமான ஓர் எழுத்து ஒன்று அஞ்செழத்தில் உள்ளது. அந்த எழுத்தை அறிந்து ஓதினால் , அஞ்சாதே அஞ்சாதே என அந்த நாதன் நம் அம்பலத்தில் ஆடும். என்கிறார். இங்கே அம்பலம் என்றால் என்ன என அறிந்து கொள்ள வேண்டும். அம்பலம் என்றால் நம் தலைபகுதியைத் தான் உணர்த்துகிறார். அதை சிற்றம்பலம் என்றும். அண்டவெளியை பேரம்பலம் என்றும் கூறுவர். அதே போல் திருவரங்கம் என்றால் நம் உயிர் உடல் எடுக்கும் கர்ப்பபை தான்.
Tags: சிவவாக்கியம்
No Comments