23. தங்கம் ஒன்று, ரூபம் வேறு, தன்மையானவாறு போல்.
செங்கண், மாலும் ஈசனும் , சிறந்து இருந்தது எம்முள்ளே !
பிங்களங்கள் பேசுவார், பிணங்குகின்ற மாந்தரே!
எங்குமாகி நின்ற நாமம், நாமம், இந்த நாமமே !,
தங்கத்தை உருக்கி, வெவ்வேறு உருவங்கள் செய்ய முடியும். வெவ்வேறு உருவங்களாக இருந்தாலும், அது தங்கத்தால், செய்யப்பட்ட தன்மை போல , நமது உடல்கள் வெவ்வேறு உருவங்களாக இயங்கிக் கொண்டு இருந்தாலும், அது செய்யப்பட்டது , என்னவோ , இந்த ஐம்பூதங்களால் தான். இந்தப் பாடலில் செங்கண், மால், ஈசன் எனச் சிவவாக்கியர் சொல்வது என்ன வென்றால், கருமை, செம்மை, வெண்மைதான். இதில் செங்கண் என்றால் இரத்தம் , ஈசன் என்றால் வெள்ளையான நின நீர். இந்த நீர்தான் நம்மை உயிர்ப்புடன் வைக்க உணர்வாக உடலெங்கும் பரவி நிற்கிறது. மால் என்றால் கருமை, அதாவது சக்தி. சக்தியைக் கண்களால் காணமுடியாது. இந்த இரத்தமும், உணர்வு நீரும் உடலெங்கும் ஓடும் சக்திதான் மால். அதேபோல் சிவப்பு அணுக்களாகவும், வெள்ளை அணுக்களாகவும், உடலெங்கும் ஓடி என்னுள் சிறந்து இருந்தது என்கிறார். அவை மூன்றும் ஒன்றுதான். அதாவது சக்தியா, செல்வமா, கல்வியா என போட்டி போடுவது போல. இப்படி இம் மூன்றையும் பிரித்துப் பேசி என்னோடு பிணங்கி நிற்கின்ற பேதை மனிதர்களே! ‘ என் உடலில் மட்டுமல்ல வெளி எங்கும் பரந்து செய்கண், மால், ஈசனாய் பரந்து நின்ற நாமம் , இந்த நாமம் தான்.
Tags: சிவவாக்கியம்
No Comments