சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு

சிவவாக்கியம் பாடல் 22 – சங்கு இரண்டு

22. சங்கு இரண்டு, தாரை ஒன்று, சன்ன பின்னல் ஆகையால்,
மங்கி மாளும் தேய் உலகில் மனிடங்கள் எத்தனை?.
சங்கிரண்டையும், தவிர்ந்து, தாரை ஊத வல்லீரேல் !
கொங்கை, மங்கை, பங்கரோடு கூடி வாழலாகுமே!.

சங்கு இரண்டு என்றால் – நம் நுரையீரல் இரண்டு இருப்பதைத்தான், குறிக்கிறார். தாரை என்றால் நம் வயிறு என்று பொருள். தாரை என்றால் வெற்றி விழாக்களில் ஊதப்படும் ஒரு ஊதுகுழல் கருவி. அதை ஊத வயிற்றில் இருந்துதான் காற்று பிடித்து ஊத முடியும். இந்த நுரையீரலும், வயிறும் , காற்றுப் போகும் பாதையும், உணவுக் குழாயும் , சன்ன பின்னலாக , இருக்கும். உணவுக் குழாயும், காற்றுக் குழாயும் ஒரு சேர வேலை செய்யாத ஒரு ஏற்பாடு அதில் இருக்கிறது. அப்படி அந்த நுரையீரலைத் தவிர்த்து வயிற்றுக்குள் செல்லும் காற்றை , தலைப்பகுதிக்கு ஊத வல்லீரேல் ? இது தெரியாமல், இந்த தேய் உலகில் மங்கி, இறக்கும் , மானிடர்கள் எத்தனை பேர். அப்படி சரியாக வயிற்றுக்குள் ஒடுங்கிய வாயுவை , கருத்தினால் தலைக்கு ஊத தெரிந்தால், மங்கையரோடு சேர்ந்து வாழ்வது போல இருக்கும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *