21. சாமம், நாலு வேதமும், சகல சாத்திரங்களும்,
சேமமாக ஓதினும், சிவனை நீர் அறிகிலீர்.
காமநோயை விட்டு நீர், கருத்துளே உணர்ந்த பின்,
ஊனமற்ற காயமாய் இருப்பன் , எங்கள் ஈசனே!.
நம் முன்னோர்கள் நம் தமிழ் நாட்டிற்குப் பொருந்தக்கூடியதாக, ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக , பிரித்திருந்தார்கள். அதாவது காலை, மதியம், ஏற்பாடு, மாலை, சாமம், வைகறை. ஒவ்வொரு பொழுதும் நான்கு மணி நேரம் கொண்டது. காலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை வரை. அதில் சாமம் என்பது அனைவரும் நன்கு தூங்க வேண்டிய நேரம். அந்த சாமத்தில் , தூங்குவதை விட்டு விட்டு, சிவன், கல் ஆலமரத்தின் கீழ் அருளிய நான்கு வேதியல்களை (உருக்கு, அதிர்வண, சாம, ய சூரணம்) விட்டு விட்டு , புரியாத நான்கு வேதங்களையும், சகல சாத்திரங்களையும், சேமமாக ஓதினும் , நீர் சிவனை அறிகிலீர். இதையெல்லாம் ஓதிக் கொண்டு இருந்தால் , அறியவும் முடியாது. அதே போல் நம் ஒவ்வொருவரின் திருமேனியும் உருவாகக் காரணமான அந்த மூல , தாய் தகப்பனின் இன்பத்தினை, காமம் என்ற கருத்து நோயை விட்டு , அந்த மூல உணர்வும், அதன் பின் கர்ப்பப்பையில் , நடக்கும் , நம் உடல் முளைத்தெழும் , உண்மைகளை, கருத்தாக , உம்முள் உணர்ந்தால் தான் , ஊனமற்ற காயமாய் இருக்கும் நம் ஈசனை, உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
Tags: சிவவாக்கியம்
No Comments