சிவவாக்கியம் பாடல் 20 – அஞ்சு மூணு

சிவவாக்கியம் பாடல் 20 – அஞ்சு மூணு

அஞ்சு மூணு எட்டதாம், அனாதியான மந்திரம்.
நெஞ்சிலே நினைந்து கொண்டு, நீர் உரக்கச் செப்பிரல்,
பஞ்சமான பாதகங்கள், நூறு கோடி செய்யினும் !
பஞ்சு போல் பறக்குமென்று, நான் மறைகள் பண்ணுமே!

ஓம் – அ உ ம் எனும் 3 எழுத்துக்களும். நமசிவாய எனும் 5 எழுத்துக்களும் மொத்தம் 8 எழுத்துக்களும் அனாதியான மந்திரம் என்று சொல்லுகிறார். இதைப் புரிந்து கொள்ள, அண்டத்தையும், இந்த உடலைப் பற்றிய அறிவும் வேண்டும் . அதைத்தான் சுருக்கமாக ஓம் நமசிவாய எனும் , மந்திரமாக கொடுத்துள்ளார்கள். மந்திரம் என்றால் பெரிய தகவல்களை சுருங்கக் கொடுப்பது தான். வரும் பாடல்களில் , இந்த அண்டத்தையும் அதன் உருவாக்கம், முடிவுவரையும், நம் உடல் , உயிர் , பிறப்பு, இறப்பு, வாழ்வியல் என பல்வேறு விதமாக கூறுவார். அந்த ஓம் நமசிவாய எனும் அந்த மந்திரத்தை , நெஞ்சிலே அதைப் பற்றி தெரிந்து கொண்டு, உறக்கச் செப்பிரேல் ! இதுவெல்லாம் தெரிந்து கொண்டு , நீங்கள் வாழும் போது, எந்தவிதமான தவறுகளை இழைக்காமல் தான் வாழ முடியும். அப்படியும் ஏதாவது பஞ்சமா பாதகங்கள் , நூறு கோடி செய்தாலும், அது நல்லவற்றுக்காகத் தான் இருக்கும். ஆகையால் அது பஞ்சு போல் பறக்கும் என்று, நான் மறைகள் சொல்லுகின்றன. மறை நூல்கள் என்றால், இறைவன் நமக்கு , சில தகவல்களை மறைத்து வைத்துள்ளான். அது போல் நம் முன்னோர்களும், எல்லோருக்கும் எல்லா வற்றையும், நேரடியாக சொல்லாமல், தேடி வருபவர்களுக்கு புரியவேண்டி, மறை நூலகளாக வடித்துள்ளார்கள். அதைப் படித்தால் , எளிமையாக நன்றாக வாழலாம். பாதகங்கள் செய்ய முடியாது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *