சிவவாக்கியம் பாடல் 18 – வித்தில்லாத சம்பிரதாயம்

சிவவாக்கியம் பாடல் 18 – வித்தில்லாத சம்பிரதாயம்

வித்தில்லாத சம்பிரதாயம் , மேலும் இல்லை , கீழம் இல்லை.
தச்சில்லாத மாளிகை, சமைந்தவாறு எங்கனே?
பெற்ற தாயை, விற்று அடிமை, கொள்ளுகின்ற பேதைகாள் !
சித்தில்லாத போது சீவன் , இல்லை இல்லை இல்லையே!.

வித்து இல்லாமல் முளைக்கும், எந்த வித சம்பிரதாயங்களும், இந்த பூமியிலோ, மற்றும் இந்த விரிந்த அண்டத்திலோ, எங்கும் இல்லை. தச்சு வேலை செய்யாமல் எந்த , மாளிகையும் கட்ட இயலாது. ஆனால் நம்முடைய இந்த அழகான உடல் , யாரும் தச்சு வேலை செய்யாமல், எப்படி இயங்குகிறது? பெற்ற தாயையும் அடிமையாக விற்று , வரும் வருமானத்தில் வாழ நினைக்கும் பேதைகாள் ! சித்து இல்லாத போது சீவன் இல்லை. அதுவும் சி என்றால் வெப்பம். வெப்பம் இல்லாமல் சீவன் (உயிர்) இல்லை இல்லை இல்லையே!.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *