சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்

சிவவாக்கியம் பாடல் 17 – நாலுவேதம் ஓதுவீர்

நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.

ஆலமரத்தின் விதையில் , அது வளர்ந்து, பரந்து, விரிந்து , மலர்ந்து, காய் கணி உருவாகி, மீண்டும் பட்டுப் போவது வரை உள்ள அத்தனை ரகசியத்தையும் உள் அடக்கி சிறு விதையாக காட்சி அளிப்பது போல், இந்த பரந்த , பேரண்டத்தின், அத்தனை தன்மைகளையும் , தகவல் களாக , உள் அடக்கி உள்ள ஆலம் உண்ட கண்டனை , அறிந்து அதை கல் ஆல மரத்தின் அடியில் அமர்ந்து நான்கு வேதியல்களாக ( உருக்கு வேதியல், அதிர்வண வேதியல் , சாம (அரசியல்) வேதியல், யசூரண வேதியல் ( சூரணங்கள் தயாரித்து மருத்துவத்திற்குப் பயன்படுத்துவது, மற்றும் வேதியல், பொருள்களை தயாரித்தல்) ,) நமக்குத் தந்த சிவனை காலன்(யமன்) என்று சொல்கிறீர்களே கனவிலும் அது இல்லை. உண்மையான அந்த நான்கு வேதியல்களை, திருடிக் கொண்டு, நீங்களாக மந்திரம் என்று புரியாத , எதையோ வேதம் என்று ஓதி கொண்டுள்ள உங்களுக்கு , உண்மையான ஞானம் என்றாலும், அதன் நிலையும், அறியாமல் இருக்கிறீர்கள். இவ்வளவுக்கும் காரணமான அவன் பாலில் எப்படி தெய் கலந்து உள்ளதோ? அது போல் , உங்கள் உள்ளே உள்ளதை , அறியாமல் இருக்கும் பாவிகாள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *