நானதேது, நீயதேது, நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது, குருவதேது, கூறிடும் குலாமரே? ஆனதேது அழிவது ஏது , அப்புறத்தில் அப்பரம்.
ஈனதேது , ராம, ராம ,ராமம் என்ற நாமமே!
நான் என்பது ஏது? நீ என்பது எது? உனக்கும் எனக்கும் இடையே நின்ற அது ஏதடா? கோன் என்றால் அரசன், அது எது? குரு எனும் அது எது? என தெரியாமல் குழம்பும் குலாமரே?
உலகமெல்லாம் ஆனது ஏதால், எப்படி அது அழிவது, அப்புறத்தில் அப்பரம். ஈனமான (மோசமான) நாமம் எது என்றால் , அது ராம ராம ராமம் எனும் நாமமே !
Tags: சிவவாக்கியம்
No Comments