சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ

சிவவாக்கியம் பாடல் 10 – மண்ணும் நீ

10.மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய்

மண்ணும் நீ , விண்ணும் நீ , மரி கடல்கள் ஏழும் நீ.
0 என்ற ஒன்றுமில்லாததில், காலியானதில், தானாக தோன்றியதுதான் வெடிப்பு (இறை) . அந்த பெருவெடிப்பில உண்டானது தான் சிவம் (கண்ணில் காணும் அனைத்துப் பொருட்களும்,), சக்தி . வெடிப்பில் ஒன்றி இருந்த சிவமும் சக்தியும் ஒன்றையொன்று அண்டி இருந்தது. அவைகள் இருந்தன அண்டி, அதுதான் இரு அண்டி, இரண்டு. பெரு வெடிப்பில் மூண்டு எழுந்தது ஒலி, வளி, ஒளி , என மூன்று. ஒலி தான் முதலில் பின்பு ஒளி , அதில் உருவானது வளியும், காலமும் வெப்பமும், திசைகளும், இப்படி நாலாபுறமும் நான்கு கரங்களாக , விரிந்து, வேகம், துரம், காலங்களாக விரிந்து விரிந்து, அந்த நான்கு கரத்திலும் ஐந்து, பூதங்களாக, சூரியன்களாகவும், கோள்களாகவும் உருமாற ஆரம்பித்தது. இப்படி அண்டத்தின் நடுவில் நடந்த வெடிப்பிலிருந்து ஆறாக சிவமும் சகதியும் வந்து கொண்டே இருந்தது , வர வர வேகம் குறைந்து அடங்கலுற ஆரம்பித்தது. அதுதான் ஏழ. இப்படி அடங்கும் போது அண்டத்தில் இருந்த சக்திகள் 7. அவை ஒளி (Light), நீர் சக்தி (Hydro) நிலம் உராய்வு சக்தி, அதாவது ஈர்ப்பு சக்தி, காந்தசக்தி, மின்சக்தி, அணுசக்தி. வெடிப்பில் உருவான ஒலி, அதன் வேகக் குறைபாட்டால் , கடைசியாக தாமதமாக , வந்தடைந்த போது எந்த கோளில் நீர் இருந்ததோ அதில் உயிர்கள் உற்பத்தியாக தொடங்கியது,
அதுதான் நாதம். பின்பு ஆறாக 6 வந்த அண்டம் திரும்பி 9 ஆக சுருங்க ஆரம்பித்தது.
அதே போல் தமிழ் உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும், இந்த பெரு வெடிப்பில் இருந்து இன்று வரை உள்ள கால அட்டவனைதான்.(Perodic table) . பாடல் பாடும் பண் எழுத்து, அதாவது இசையை Coding ஆக எழுதும் எழுத்து உரு, பண் எழுத்து. அதுவும் நீ தான், கண்ணும் நீ , அதனுள் இருக்கும் மணியும் நீ. கண்ணுக்குள் இருக்கும் திரையில் ஆடும் நிழல்களை அறியும் பாவையும், நீ தான். இப்படி உண்மையை உண்மையான தன்மையில் உணர்வது தான் நன்னுதல். அதை நேர்மையாக அறியுமாறு அருள் தருவாயாக!

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *