7.வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.
இந்தப் பாடலுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். உங்களுக்கே அர்த்தம் புரியும். சுடலை என்றால் சாம்பல்.
இந்த ஓம் நமசிவாய என்பது தமிழ் சித்தர்களின் அறிவியல் கொடை. இது மனித குலத்திற்குச் சொந்தமானது. எந்த மதத்திற்கும் சமயத்திற்கும் சொந்தமல்ல.
உயிர்களுக்கும், அண்டத்துக்கும், இறைவனுக்கும் உள்ள தொடர்பின் அறிவியல்.
உயிர் இருந்தால் அது உடல். உயிர் அற்றுப் போனால் அது சுட வேண்டிய உடல் – சுடல். அந்த உயிர் அற்ற சுடலைக் கொண்டு போய் தோட்டி கைக் கொடுப்பரே.
Tags: சிவவாக்கியம்
No Comments