சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்

சிவவாக்கியம் பாடல் 6 – உருத்தரித்த நாடியில்

6. உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

விந்து, கரு முட்டையில், தரித்து , உருவம் ஆக , தொப்புல் கொடியின் மூலம், சக்தியான தாயின் ரத்தத்தில் இருந்து தாதுக்களை எடுத்து வளர்கிறது. பிறந்து வளர்ந்து மூச்சு விட்டு உயிர் வாழ்ந்து கொண்டு உள்ளோம். அந்த உருத்தரித்த நாடியான தொப்புள் கொடி, இருக்கும் பகுதியான வயிற்றில் ஒடுங்குகின்ற வாயுவை, கருத்தினால் இருத்தியே , தலைக்கு ஏற்ற வல்லீரேல். இதை புரிந்து கொள்ள- நாம் உள் இழக்கும் மூச்சுக் காற்று , நுரையீரலுக்கும் , வயிற்றிற்குள்ளும் பிரிந்து செல்லும். நுறையீரலுக்குள் செல்லும் வாயுவில் உள்ள பிராணவாயுவை பிரித்து திரவ நிலைக்கு மாற்றி, ரத்தத்தில் கலக்கியும், ரத்தத்தில் வரும் திரவ நிலையில் உள்ள கரியமில வாயுவை , மீண்டும் வாயு நிலைக்கு மாற்றி வெளியே வரும். ஆனால் வயிற்றுக்குள் சென்ற வாயு , உள் உறுப்புகளின் இடையே உள்ள இடைவெளிகளில் புகுந்து, ஒடுங்கி மீண்டும் வெளி வரும். இந்த அமைப்பு உள்ளே இருக்கும், ராச உறுப்புகளும், துனை உறுப்புகளும், சுரப்பிகளும் காற்றோட்டத்துடன், ஆரோக்கியமாக இருக்கத்தான். நாம் தூங்கும் போது நம் வயிற்றுக்குள் செல்லும் காற்று சீராக இயங்கி, உடலை – எழுந்தவுடன் சுறுசுறுப்பாக்கும். அந்த வயிற்றுக்குள் சென்று திரும்பும் வாயுவை , நாம் நம் உடலில் எந்த பகுதியில் நினைக்கிறோமோ, அந்த பகுதிக்குச் சென்று அதை சுறுசுறுப்பாக்கும். அந்த வாயுவை தலையில் நினைத்து ஏற்றினால் தலையில் உள்ள மதியில் உள்ள செல்களுக்குச் சென்று அதை சுறுசுறுப்பாக்கி , புத்துணர்ச்சி பெறும். மூளை நன்கு வேலை செய்தால் தான் , மற்ற உறுப்புகள், ஆரோக்கியமாக அதனதன் வேலையைச் செய்யும். இப்படி கபால மேற்றினால் வயதானவர்களும் பாலனாவார்கள். இது அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே. நாதர் என்றால் உயிர் (தீ) தந்தவர் தந்தை. உருக் கொடுத்தவள் தாய் அது உண்மைதான்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *