283. கொள்ளொணாது மெல்ளொணாது, கூதறக் குதட்டொணா?
தள்ளொனாத , அணுகொனாத தாதலான். மனத்துள்ளே !
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன்,
வெல்லொணாத பொருளை நான் விளம்புமாற தெங்கனே!
இறைவனைப் பற்றி விளக்குங்கள் என கேட்டதற்கு , அதைப்பற்றி கூறும் பாடல் தான் இது.
கொள்ளொனாது என்றால் ஏதாவது பெரிய பாத்திரத்திலோ , பெரிய இடத்திலேயோ எதிலும் அடைத்தாலும் கொள்ளாமல் இருப்பவன் அவன்.
அதை சாப்பிட்டு, சுவை பார்க்க முடியாது, குதப்பி சாப்பிட்டு அதிலிருந்து ஏதாவது சத்து எடுக்க முடியும் என்றால் அதுவும் முடியாது.
அதை பிடித்துத் தள்ளவும் முடியாது.
அவ்வளவு பெரியது.
வேறு எங்காவது நின்றுதான் ஒன்றைத் தள்ள முடியும், அதிலேயே இருந்து கொண்டு அதை தள்ள முடியாது.
அண்டத்தில் உள்ள எந்த தாதுவிலும் அணுக்கள் இருக்கும். ஆனால் தாதுக்களை உருவாக்கிய தாதலானை எந்த அணுவினாலும அணுக முடியாதவன் . மனதால் இறைவனை, அவன் உருவாக்கிய சிற்பரத்தைப் பற்றியும், அதன் பயனையும், தெரிந்து தெளிந்து விடலாம் என்றால் அது முடியாது.
அவனைப் பற்றி அறிந்தால் தான் அவனை வெல்ல முடியும். வெல்லொனா அவனைப் பற்றி அந்த பொருளைப் பற்றி கேட்டால் நான் எப்படி சொல்ல முடியும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
நம் மனித வாழ்வியலை மீட்க வந்த அருமை சித்தர்கள் நன்றிகள் உமக்கு!!!