Good way to science
கரியதோர் முகத்தை ஒத்த, கற்பகத்தைக் கைதொழ. கலைகள் நூல்கள், ஞானமும், கருத்தில் வந்து உதிக்கவே, பெரிய பேர்கள், சிறிய பேர்கள், கற்றுணர்ந்த பேரெலாம், பேயனாகி ஓதிடும். பிழை பொறுக்க வேண்டுமே! அஞ்செழுத்து என்பது பஞ்சபூதங்களின் அடிப்படையில் அமைந்த எழுத்துக்கள். அஞ்செழுத்து என்பது வெளி, காற்று, வெப்பம், நீர், மண் என ஐந்து பூதங்களாக அண்டமாகவும் அகண்டமாகவும் உள்ளது. இந்த ஐந்து எழுத்துக்களில் ஒன்றான ‘யா’ என்பது வெளியை குறிக்கும் சொல். சிவம் சக்தி இறைவன் என ஒன்றி ஒடுங்கி இருந்தது, வெடித்து படர்ந்து அண்டமாகவும் அகண்டமாகவும் வெளியாகியது. வெளி உருவானதால் காலம் உருவானது. இந்த வெடிப்பில் வெளி உருவானது போல் சத்தமும், சிவந்த ஒளியும், காற்றும், வெப்பமும் உருவானது. இதில் ஆதியான மூன்று தேவர்கள் என்பது, வெளியும் காற்றும் வெப்பமும் தான். வெளிக்கு ‘யா’ என்றும், காற்றுக்கு ‘வா’ என்றும், வெப்பத்தைக் குறிக்க ‘சி’ என்றும் ஆறிரண்டு நூறு தேவர்களான நம் முன்னோர்கள் அன்றே உரைத்திருக்கிறார்கள். இந்த ஐந்து எழுத்துக்களில் தான் நீரைக் குறிக்கும் மகாரமும், மண்ணைக் குறிக்கும் நகரமும். அதாவது ‘ம’ என்றால் நீர், ‘ந’ என்றால் மண். இந்த ஐந்து பூதங்களால் தான் நம் உடல் எனும் சடங்களாக மாறி உள்ளது.
Tags: சிவவாக்கியம்
Good way to science
Fabulous Sir Continuously post Siva vakiyar Songs. Thank you.