இதயவனம் இளங்கோவின் வழக்கு சம்பந்தமாக இரண்டு வாரம் தொடர்ந்து நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை வந்து நீதி மன்ற நடவடிக்கைகளை பார்த்து , வியப்பதா? அல்லது ஏன் இப்படி இருக்கிறார்கள்? என நொந்து கொள்வதா ?
ஏனென்றால் நம் ஜெயசீலன் ஐயாவின் வாதத்தை போன வாரம் அன்னூர் கோர்ட்டில் கேட்டு வியந்தோம். இந்த வாரம் காமாட்சி அவர்களின் வாதங்களை கேட்டு நீதிபதி, அந்த அம்மாவே தலையாட்டி ரசித்தார்கள்.
நொந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், police தரப்பிலும், police – தரப்பிற்கு வாதடிய ppo , அவர்கள் செய்த தவறுகளை மறைக்க public health act 1969 no – 82 பின்னால் ஒளிந்து கொண்டு , மூன்றாம் பிரசவம் வீட்டில் பார்ப்பது சட்டத்திற்கு விரோதமானதாகவும், அதை கேட்க வீட்டில் வந்து விசாரிக்க police – க்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறதென்றும், இதில் சம்பந்தப்படாத யாரும் மனு தாக்கல் செய்ய முடியாது எனவும் வாதாடினார்.
இதில் என்ன கொடுமை என்றால் அந்த Section 82 என்ன சொல்கிறது என ppo வும் பார்க்கவில்லை. அந்த சிறுமுகை Inspector -க்கும் அது தெரியவில்லை. இதை கூட தெரிந்து கொள்ள முடியாதவர்களின் அறியாமையில், இருப்பவர்களிடம் தான் அரசு இயங்கிக் கொண்டு உள்ளது என்பதை நினைக்கும் போது நொந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
ஆனால் காமாட்சியும், ஜெயசீலன் அவர்களின் , நையாண்டி கலந்த சீண்டலுடன் அந்த வாதங்களை எதிர் கொண்டு முறியடித்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
இதில் ஒரு படி மேலே போய் National reform movement இயக்கமே ஒரு fake என வாதிட்டார். அதற்கு தக்க பதிலடி வாங்கி சாரி கேட்டுக் கொண்டார் Ppo. எப்படி ஒரு தவறான வாதங்களை கோர்ட்டில் , கோர்ட்டை அவமதிக்கும் விதமாக, சட்டங்களையே , தவறாக சித்தரித்து எதிர்தரப்பினரையும், கேளி செய்கிறார்கள் இந்த public Servent -கள்.
ஆனாலும் நம் வாதங்கள் முறையாக கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பட்டு இருக்கிறது. அடுத்த வாரம் order pass செய்வதாக நீதிபதி சொல்லியிருக்கிறார்.
இந்த Fir கேட்டு போட்ட வழக்கில் இயற்கை நமக்கு தடங்கல் இல்லாமல் நடத்த , நம் வாதங்கள் நீதிபதிக்கு தடங்கல் இல்லாமல் சென்று சேர அருளி இருக்கிறது.
இந்த வழக்கு இன்று 1/2 மணி நேரம் நிசப்தமாக அனைத்து வக்கீல்களும், வாதங்களை கேட்டு அசந்து நின்றிருந்தார்கள்.
இறைக்கு நன்றி
Tags: வரலாறு
No Comments