314. ஓடுகின்ற ஐம்புலன்,
ஒடுங்க அஞ்செழுத்துலே!
நாடுகின்ற நான்மறை, நவிழுகின்ற ஞானிகாள்,
ஊடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துலே !
ஆடுகின்ற பாவையாம், அமைந்ததே சிவாயமே!
ஓடுகின்ற ஐம்புலன்கள் ஒடுங்குமா? நமசிவாய எனும் ஐந்து எழுத்தை ஓதினால் ஒடுங்கி விடுமா? அல்லது அந்த ஐந்து எழுத்துக்களின் அனைத்து பரிமாணங்களையும் அறிந்து புரிந்து வியந்து அடங்கி ஒடுங்கினால் ஒழிய வேறு எப்படியும் ஒடுங்க வாய்ப்பில்லை.
நாடுகின்ற நான் மறை நவிழுகின்ற ஞானிகள். ஞானிகள் அந்த ஐம்புலன்கள் ஒடுங்க நான் மறைகளை எதற்காக சொல்கிறார்கள். சிவாயம் எனும் நான் மறை உருக்கிப் பிரித்தல், அதிர்வு, யாசூரணம்,
சாமம் எனும் நான்கு வகையான மறைந்து கிடக்கும் அறிவியல் எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும். எதற்காக ஐம்புலன்கள் ஒடுங்க வேண்டும். நம் உடலில் ஊடுகின்ற வாதம் பித்தம் கபம் எனும் முக்குணங்கள் நம் உடலின் தன்மையை தீர்மானிக்கின்றது.
கண்களில் ஆடுகின்ற பாவை இரண்டு . அந்த பாவையின் ஆட்டத்தில் உண்டான பார்வையால் நம் அதிகமாக உலகினை புரிந்து கொண்டு, ஐம்புலன்கள் ஒடுங்க நான்மறைகளை கற்று, முக்குணங்களை சமப்படுத்தி அமைதியடைதலே, ( ஒன்றி – ஒன்றாக) இப்பாடலின் நோக்கம்.
ஓடுகின்ற ஐம்புலன்
நாடுகின்ற நான் மறை
ஊடுகின்ற குணங்கள்
ஆடுகின்ற பாவை
தமிழின் சிறப்பு இவைகள்
Tags: சிவவாக்கியம்
No Comments