Elango:
13-02-2025 வியாழன்
காலையில் மேட்டுப்பாளையம் நீதிபதி மன்றத்திற்கு சரியான நேரத்திற்கு நீண்ட தொலைவிலிருந்து இரவிசந்திரன் ஐயா, காமாட்சி சங்கர் ஐயா, கார்திக் ராஜா மற்றும் மகேஸ்வரன் ஐயா, வந்து சேர்ந்தனர்.
JM நீதிபதி, மாவட்ட தலைமை நீதிபதியுடனான சந்திப்பின் காரணமாக, மேட்டுப்பாளையம் வரமாட்டார் என அறிவிப்பு தந்து, அடுத்த வாரம் வாங்க என நீதிமன்ற அலுவலர்(MC) கூறினார்.
11:30 மணிக்குள் அன்னூர் நீதிமன்றத்திற்குச் சென்றால், நீதிபதியைச் சந்திக்கலாம் என்று MC கூற, அவ்வாறே அனைவரும் அன்னூர் நீதிமன்றத்திற்குச் சென்றோம். வழக்கமான நீதிமன்ற அலுவல்கள் ஏதும் அங்கு நடைபெறாத நிலையில், நீதிபதி சந்திப்பிற்காக, கோவை செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்பொழுது சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாக தகவல் வர, நீதிபதி தனது அறையில் வழக்குக் கோப்புகளை படிப்பது, உத்தரவுகளை தயார் செய்வது என பணியில் இறங்கினார்.
மதியம் வரை காத்திருப்பிற்கு பின் நீதிபதியிடம் பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட காமாட்சி ஐயா, வழக்கை எடுத்து கொள்ளுமாறு கோரிக்கை வைத்தார். போலிசார் மீது புகார் செய்து ஒரு மாதமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென நீதிபதியிடம் கூறினார்.
நீதிபதி தனக்கு பல பணிசுமைகள் இருப்பதால், எந்த வழக்கிற்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் தரமுடியாத சூழல் உள்ளது. நீங்கள் புகார் தந்தவுடன் வழக்கை எடுக்க முடியாது என கூறினார். அடுத்த வாரம் வாருங்கள் என கூற, நாங்களும் நகர முற்பட்ட போது, MC மூலம் நாளை வாங்க புகார் பதிவு செய்து விசாரணை செய்யப்படும் என JM கூறினார்.
14-02-2025 வெள்ளி
காலை 10 மணிக்கு அன்னூர் நீதிமன்றத்திற்கு காமாட்சி சங்கர் ஐயா, மகேஸ்வரன் ஐயா,கார்திக் ராஜா ஐயா, மோகன்ராஜ் ஐயா, கண்ணன் ஐயா ஆகியோர் வந்துசேர்ந்தனர். மாலை மூன்று மணிக்கு மேல் விசாரணை தொடங்கியது. காவல் ஊழியர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் அத்துமீறிய செயல்களை விளக்கினார்
காமாட்சி சங்கர் ஐயா.
நீதிபதி, சிறுமுகை காவல் நிலைய ஆய்வாளர் புகார் குறித்த விளக்க அறிக்கை சமர்பிக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் படி FIR உம் விசாரணை அறிக்கையும் 27.02.2025 க்கு முன்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்திரவிடுகிறோம் எனக் கூறினார்.
Tags: வரலாறு
No Comments