313. ஆதியான ஐம்புலன்கள் அவை உமக்குள் ஒக்குமோ!
யோனியில் பிறந்திருந்த துன்பமிக்கும் ஒக்குமோ!
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே உணர்கிரேல்,
ஊணுறக்க போகமும் உமக்கெனக்கும் ஒக்குமே!
ஐம் புலன்கள் என்பது என்ன?
கண் என்பது ஒரு பார்க்கக் கூடிய கருவி. அந்தக் கண்ணால் கண்ட காட்சியை, பிரித்து பகுத்து அது என்ன?, எது ? என அறிய கூடியது தான் புலன். இப்படி உடலில் உள்ள ஐந்து வகையான கருவிகளின் மூலம் நம் ஐம்புலன்கள் இந்த உலகை ஐந்து வகையான வேறு வேறு பரிமாணங்களில் புரிந்து கொள்கிறது. இந்த ஐம்புலன்கள் நம் உடலில் ஒக்குமோ என்றால் உடலோடு பொருந்தி இருக்குமோ? என்கிறார்.
உடல் இருந்தால் அதை பாதுகாத்து செம்மையாக வைத்துக் கொள்ள செய்யும் செயல்களால் கண்டிப்பாக துன்பம் வரும். உடல் தேவை என்றால் யோனியில் தான் பிறந்திருக்க வேண்டும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், தாய் வயிற்றில் உடல் வளர்த்து யோனியில் பிறந்து தான் ஆக வேண்டும். உயிருக்கு தேவை உடல். இந்த உடலின் மூலம் தான், உடலில் உள்ள ஐந்து கருவிகளின் மூலம் புலன்கள் உலகை அறிந்து கொள்கிறது.உலகை முழுதும் புரிந்து கொள்ளும் வரையில் தான் இந்த உடலும் ஐந்து வகையான கருவிகள் தேவை. புரிந்து கொண்ட பின் இந்த உடல் தேவை அற்றதாகி விடும். வீணர்கள் மெய்மையை அறியாமல் முயற்சி பயிற்சி என பிதற்றுகிறார்கள் என்கிறார்.
உடலுக்குத் தேவையான ஊன், மற்றும் உறக்கம் என்பதெல்லாம், உலகம் முழுவதும் புரியாத எனக்கும் உனக்கும் பொருத்தும்.
உலகை புரிந்து கொண்டு உடல் தேவை இல்லை என அறிந்தவர்களுக்கு ஊண் உறக்கம் இல்லை என்கிறார்
Tags: சிவவாக்கியம்
No Comments