312. ஐம்புலனை வென்றவர்க்கிங்கு அன்னதானம் ஈவதாய் ,
தன் புலன்கள் ஆகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ?
ஐம்புலனை வென்றிடாத அவத்தமே உழன்றிடும்,
வம்பருக்கும் ஈவதும் , கொடுப்பதும் அவத்தமே!
ஐம்புலன்களையும் என்றால் தொட்டுணர்தல், சுவைத்து உணர்தல், முகர்ந்து உணர்தல், பார்த்து உணர்தல், கேட்டு உணர்தல் என்பவை தான். இதை வென்றவர்களுக்கு அன்னதானம் கொடுப்பது இறைவனுக்கு படைப்பதாக சொல்கின்றவர்களை பார்த்துக் கேட்கிறார்,
தன்னுடைய ஐம்பலன்களாகவும், உடலாகவும், இந்த பிரமாண்டமாக இருக்கும் இறைவனுக்கு அது ஏறுமோ? என்கிறார்.
ஐம்புலன்களையும் வென்றவர்களுக்கு எதுவும் தேவை இல்லை. அவர்களுக்கு எது தேவையோ? அதை இந்த இறைவனாகிய இயற்கை கொடுத்து விடும்.
இங்கு ஐம்புலன்களை வெல்லாதவர்களாக திரியும் வம்பருக்கு எதையும் கொடுப்பது அபத்தம் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments