இன்று 30/1 /2025- வியாழக்கிழமை மீண்டும் மேட்டுப்பாளையம் கோர்ட்டுக்கு திரு இளங்கோ வுக்காக சென்று இருந்தோம்.
மதியம் 2 மணிக்கு எங்கள் கட்டை எடுத்து ஜெயசீலன் வகையறா என்று அழைத்தார்கள். அனைவரும் சென்று நீதிபதி முன்நின்றோம். ஜெபசீலன் ஐயாவிற்கு சேலம் கோர்ட்டில் வேலை இருந்ததால் அவர் வரவில்லை.
திரு காமாட்சி அவர்கள் பேச ஆரம்பித்தார்.
அதற்குள் அந்த நீதிபதி அம்மா மற்றவர்கள் வெளியே இருக்கும்படியும் அவரை மட்டும் பேச பணித்தார்.
பின் victim எங்கே என்றார்.
காமாட்சி பேச ஆரம்பித்து நம் பக்க நியாயங்களை ஆங்கிலத்தில் அவரிடம் கூறினார்.
ஆனால் சிறுமுகை காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காவிடில், Sp கோயமுத்தூர் அவர்களுக்கு Resister post -ல் தான் புகார் கொடுக்க வேண்டும். e-mail-ல் புகார் கொடுத்தால் ஏற்புடையது அல்ல என்றும், Resister post -ல் புகார் கொடுத்து 15-நாட்கள் கழித்து எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் தான் Court -ல் மனு கொடுக்க வேண்டும். அதற்கு நாங்கள் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று கோரி மனுவை நிராகரித்து writtern கொடுத்து விட்டார்கள்.
வெளியில் வந்த உடன் முதல் வேளையாக கோயமுத்தூர் Sp office – க்கு ஒரு Resister post அனுப்பி விட்டோம்.
மீண்டும் 15 நாட்கள் காத்திருந்து கோர்ட்டை அனுக வேண்டும் எனும் விதியை நொந்து கொண்டு , வீடு திரும்பினோம்.
Tags: வரலாறு
No Comments