இன்று மாசி – 1 (Jan-20) திங்கள் கிழமை.
ஏன் ? இன்று மாசி – 1 என்றால் சூரியன் தென்செலவு (தட்சிணாயனம்) முடித்து வடசெலவு ஆரம்பித்து 29 நாட்கள் கழிந்து விட்டது. இந்த 29 நாட்களும் தனுசு ராசியில் தான் சூரியன் இருந்தது. இன்று தான் மகர ராசியில் சூரியன் நுழைகிறது. இதை கிழக்கு பார்த்த கோயில்களில் கருவரையிலிருந்து காலை 5.30 மணிக்கு அல்லது மாலை வேலைகளில் வான் பார்த்து சூரியன் எந்த ராசியில் இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.
மகர ரேகையில் Jan – 14-ல் நுழைந்து விட்டது என்பவர்களுக்கு கோயில், கருவறை என்பதெல்லாம் எதற்கு என தெரியாதவர்கள்.
வானில் ராசிகளும், நட்சந்திரஸ்களும் எங்கே இருக்கிறது என தெரியாதவர்கள்.
அவர்கள் தயாரிக்கும் காலண்டர்களைப் பார்த்து பருவம் ஒரு மாதம் பின் தங்கி விட்டது என நாம் அறியாமையில் இருக்கிறோம்.
அவரவர் இல்லங்களிலோ , தோட்டங்களிலோ ஒரு குச்சி நட்டு , அதன் பின்புலத்தில் வான் பார்க்க பழகி விட்டால் நாமே காலண்டர் தயாரித்துக் கொள்ளலாம். மிகவும் எளிமையான முறை.
மற்றும் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்தால் நம் தோட்டத்தில் எப்பொழுதெல்லாம் மழை வரும் என தெரிந்து கொண்டு வேளாண்மை செய்யலாம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments