வள்ளுவர்,  கோளில் பொறியில் குணம் இலவே, எண் குணத்தான் தாளை வணங்காத் தளை.

வள்ளுவர்,  கோளில் பொறியில் குணம் இலவே, எண் குணத்தான் தாளை வணங்காத் தளை.

கோள்கள் பயணம் செய்யும் பாதையில் உள்ள விண்மீன்களை அடையாளப்படுத்தி, 30 திகிரியில் உள்ள விண்மீன்களை இணைத்து ராசிகளாக்கினர். சந்திரன் பயணம் செய்யும் வட்டப் பாதையை 13.33 என்று 27 பாகங்களாக்கி 27 நட்சத்திரங்களாக பிரித்து வானத்தை புரிந்து அதை பால் வெளியாக (Galaxy) அறிந்து வைத்திருந்தனர் நம் முன்னோரகள்.

 

ஆனால் அந்த 12 ராசிகள், மற்றும் 27 நட்சத்திரங்களிலும் நம் பூமி, சூரியன் நிலா , மற்றும் 5 கோள்களும் பயணிக்கும் பொழுது நம் பூமியில் ஏற்படும் தாக்கத்தை குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வந்ததில் பல கருத்துக்களை உருவாக்கினார்கள்.

நம் பூமி சில ராசிகளில் பயணிக்கும் பொழுது வெயில் காலமாகவும், சில ராசிகளில் பயணிக்கும் பொழுது குளிர்காலமாகவும் , இப்படி நம் பூமியில் அந்த ராசிகளில் , மற்றும் நட்சத்திரங்களில் பயணிக்கும் பொழுது , மாற்றங்கள் ஏற்படுவதை அவதானித்து, அந்த ராசிகளுக்கு மற்றும் நட்சந்திரங்களுக்கு நம் பூமியில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய குணங்கள் இல்லாவிட்டாலும், அந்த ராசியில் அல்லது நட்சத்திரத்தில் மற்ற கோள்கள் பயணிக்கும் போது நம் பூமியில் தாக்கம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து அந்தந்த குணங்கள் இல்லாத ராசிகளுக்கும், நட்சந்திரங்களுக்கும் , குணங்கள் கொண்ட கோள்களின் குணங்களை ராசிகளுக்கும், நட்சந்திரங்களுக்கும் கொடுத்தனர். உதாரணமாக மேச ராசிக்கு , செவ்வாய்யை அதிபதி ஆக்கினார்கள். கார்த்திகைக்கு சூரியன் என்று பொருத்தினார்கள்.

இப்படி இந்த ராசிக்கு இந்த அதிபதி என்று, கோள்களின் குணங்களை கொடுத்து அதை கண்காணித்து புரிந்து கொண்டனர்.

அதே போல் இந்த மிகப்பெரிய அண்டம், பிரமாண்டம், எண்களின் குணத்தைக் கொண்டு அதன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என புரிந்து கொண்டனர். உதாரணமாக 12 மாதங்களில் நமது பூமி சூரியனை 360 திகிரி சாய்ந்த வட்டத்தில் சுற்றி வருகிறது என்றும் இப்படி எண்களின் கணக்குகளில் அனைத்தையும் அறிந்து கொள்ளாலாம் எனவும் அறிந்து வைத்து இருந்தனர்.

 

இதைத்தான் வள்ளுவர்

கோளில் பொறியில் குணம் இலவே,

எண் குணத்தான் தாளை வணங்காத் தளை.

என்று கூறி உள்ளார்.

இந்த குறளின் பொருள்.

இந்த மிகப்பெரிய இறைவனின் (இயற்கை) தாளை பணிந்து வணங்காதவர்களுக்கு, அதன் பிரமாண்டத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்குத் தான் கோளிகளிலும், (பொறி என்றால் சக்தி) பெறிகளிலும் குணம் இலவே! என்கிறார். இந்த பிரமாண்டமான இயற்கை எண்களின் குணத்தைக் கொண்டு உள்ளது. அது புரியாத தலைகளுக்கு கோள்களிலும், பொறிகளிலும் உள்ள குணங்கள் புரியாது என்கிறார்.

அந்த எண் (number) குணத்தானை புரிந்தவர்களுக்குத் தெரியும் கோள்களிலும், பொறிகளிலும் குணம் இருப்பது.

அதாவது. சூரியனுக்கு வெப்பம் கொடுக்கக் கூடிய குணம் இருக்கிறது என்றும், நிலவுக்கு நம் மணங்களை (மதியை) ஆட்டுவிக்கும் குணம் உள்ளது என்றும், புதன் (அறிவன்) வியாழன் (குரு) கோள்களுக்கும் நம், புத்திக்கும், அறிவுக்கும் உள்ள குணங்கள் உண்டு என்றும், வெள்ளி, நிலா, செவ்வாய், சனி கோள்களுக்கும், நம் பூமியில் மழை பெய்வதற்கும், உள்ள தொடர்பு உள்ளது என்றும் அந்த எண் குணத்தான் தாளை வணங்குபவர்களுக்குப் புரியும் என்கிறார் வள்ளுவர்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *