இன்று சூரியன் தன் தென் செலவை முடிக்கிறது. நிழல் இந்த மூன்று நாட்களாக மில்லி மீட்டராக நகர்கிறது. நகர்ந்ததே தெரியவில்லை. இன்னும் இரண்டு நாட்களுக்கு மில்லி மீட்டராக பின் நகர்ந்து பின் செ.மீ கணக்கில் பின் நோக்கி நகரும்.
இதைத்தான் நம் அனைத்து கோயில்களிலும், கொடிமர நிழலை கணித்து கதிர் திருப்ப நாட்களையும் , சமநாளையும் குறித்து கோயில் கருவரை உருவாக்கி , கர்ப்போட்ட கணக்குகளை குறித்து வேளாண்மை செழித்து வாழ்வாங்கு வாழ்ந்து வந்தனர் நம் முன்னோர்கள்.
இன்று 13 தலை முறைகளாக அந்த வளமையை மறந்து நம் காலண்டர் திருத்தப்படாமல் உள்ளதை அறியாமல் உள்ளோம்.
அதே போல் கருவரையிலிருந்து கொடிமரத்தின் வழியாக இரவு வானம் பார்த்தால் இன்று காலை சூரியன் விரிச்சிகத்திலிருந்து தனுசுக்கு மாறுவதை ,ராசிளை வானில் பார்க்கத் தெரிந்தால் பார்க்கலாம்.
இன்று சங்கராந்தி .
போகி பண்டிகை.
நாளை தை – 1 பொங்கல்.
நாளை மறுநாள் தை – 2
மாட்டுப் பொங்கல்.
தை – 3
காணும் பொங்கல்.
இந்த பொங்கல் நிகழ்வுகள் மகாபாரத போரை இன்றளவும் நினைவு கூறும் வகையில் பண்டிகைகளாக்கினர் நம் முன்னோர்கள்.
மகாபாரத போர் வெற்றி விழா தை – 1
மகாபாரத போர் வெற்றிக்காக முக்கிய பங்காற்றிய ஆயர் குல கிருட்டினனை (கருப்பண்ணன். ) நினைவு கூறும் விதமாக மாட்டுப் பொங்கல் – தை – 2
போரில் தோல்வி பெற்ற நம் சொந்தங்களை காட்டில் சென்று திண்பண்டங்களை பகிர்ந்து, காட்டு மலர் பறித்து அவர்களுக்கு சூடி , அவர்களை அரவனைத்து , கும்மியும் கும்மாளமுமாக கூட்டி வரும் விழா
காணும் பொங்கல் – தை – 3.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
Tags: திருவிழா
No Comments