311. ஓம் நமோ! என்றுளே பாவை என்று அறிந்த பின்,
ஆண் உடல் ! கருத்துளே பாவை என்று அறிந்த பின்,
நானும் நீயும் உண்டடா! நலம் குலம் அது உண்டடா!
ஊணும் , ஊணும் ஒன்றுமே உணர்ந்திடா உனக்குளே!
ஓம் நமோ! ஓம் என்பது முருகன் அருளியது. அவர் பூமியின் அச்சு வேகா எனும் விண்மீனிலிருந்து தூபன் எனும் விண்மீனுக்கு மாறுவதை முன்கூட்டியே கணக்குகளால் அறிந்து , அனைவரையும், காவடியுடன் ஊழியை வென்று இலங்கை வரை கூட்டி வந்தார்.
அந்த நிகழ்வின் பின் அவர் அறிந்த சூரிய சுற்றையும், அதன் அச்சின் அசைவு ஓ வடிவாகவும், ம் எனும் ஓசையுடன் கடல் வடக்கில் இருந்து தெற்கில் வடியும் என முன்கூட்டி அறிந்து அளித்த அந்த வடிவம் தான் ஓம். ந என்றால் நிலம். நிலம் நீரால் மாறும் (ம – நீர்) என்பதன் மந்திரம் தான் ஓம் நமோ .
அந்த சூரியனையே அச்சு பிறல வைக்கும் ஆற்றல் சக்திக்கு (ஈர்ப்பு விசை) உண்டு. சக்திகளை நாம் பெண் தெய்வங்களாக கொண்டாடுவோம். அது பாவை என்று அறிந்த பின்.
மற்றும் ஆண் உடல் பெண்களின் கரு முட்டை எனும் கருத்து (information) நம் உடல் அமைப்பு அந்த கருத்தில் தான் உள்ளது. ஆண் உடல் கருத்தாக பாவையாக (சக்தியாக) ஒலி வடிவமாக, நாதமாக கருமுட்டைக்குள் உள்ளது என்று அறிந்த பின், இறைவனை பார்த்து நானும் நீயும் உண்டடா! நலமும் உண்டு, கெடுதலும் (குலமும்) (குலைதல்) உண்டு என்கிறார். ஊழி போன்ற குலமும் உண்டு.
என்னுடைய கறியால் ஆன உடலாகிய ஊணும், உணவாகிய (இறை) ஊணும் வயிற்றுக்குள் ஒன்றி சக்தியாக நம் உடலை இயக்குவதும் பாவை தான் என்று உனக்குள் உணர்ந்து கொள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments