310. விழித்த கண் துதிக்கவும், விந்து நாத ஓசையும்,
மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்து போய்,
எழுத்தெலாம் அழிந்து விட்ட இந்திரஞால வெளியிலே,
யானும் நீயுமே கலந்த தென்னதன்மை ஈசனே!
விழித்த கண் துதிக்கவும் என்றால் நம் கண்களுக்குத் தெரியும் அத்துனை பொருட்களைக் கொண்டு தான் நம் உடலும் கருவாகி, உருவாகிறது. அதனால் கண்களுக்குத் தெரியும் அத்தனையும் சிவமே.
கண்கள் திறந்து இருந்தாலும், தெரியாத வெளியும் சிவம்தான். வெளியில் நிறைந்து இருக்கும் கண்ணுக்குத்தெரியாத காற்றும், அணுக்களும் சிவம்தான். ஆனால் சக்தி கண்களுக்குத் தெரியாது. அந்த சக்திகளுக்கு மூலம் ஓசை. விந்துவில் இருக்கும் உயிர் அணுக்களான சிவத்தை அசைப்பது ஓசை தான். அசைத்து உயிர்ப்பித்து கருமுட்டைக்குச் செல்லும் வரை ஆற்றல் கொடுக்கும் அந்த விந்து நாத ஓசையும், அண்ட மலர்வில் கரங்களாக மலர்ந்து மேரு மலைகளாக வெண்மை நிறத்தில் பொருட்கள் பரந்து விரிந்து, உருண்டு திரண்டு சூரியன்களாகவும், கோள்களாகவும், உண்டாகி, மீண்டும், மலர்ந்த இடத்திற்கே திரும்பி அனைத்தும் ஒடுங்கி, அடர் மௌனமாக , ( எழுத்தெலாம் அழிந்து விட்ட) எழுத்துக்கள் எதுவும் இல்லாத , ஓசையே இல்லாத இந்திரஞால வெளியிலே, நானும் நீயும் (இறைவன்) கலந்து ஒன்றி இருந்த தன்மை ! என்ன தன்மை என்று சிலாகிக்கிறார் சிவ வாக்கியர்.
நம் தமிழ் எழுத்துக்கள் periodic table என்பதைத்தான் அவர் கூற வருகிறார்.
அன்று – அப்படி இருந்தோம் ஆனால் இப்பொழுது – …. சிவ வாக்கியர் – நம் உடலில் நான் எனும் அகங்காரமாக உள்ள நானாகவும், இறையும் வேறு வேறாக உள்ளோம் என்கிறார்.
அப்படி முக்தி நிலையில், சில நொடிகள், சில நிமிடங்கள், சில மணி நேரங்கள் சமாதி நிலையில் அந்த தன்மையில் தனை மறந்த பேரானந்தத்தில் இருப்பதை , பிறவா நிலை பெற இருக்கும் தன்மை என்ன தன்மை அதுவே அந்த தன்மை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments