309. இருத்தி வைத்த சற்குருவை சீர் பெற வணங்கிலீர்.
உரு கொடுக்கும் பித்தரே ! கொண்டு நீந்த வல்லீரோ!
உருக்கொடுக்கும் பித்தரும்! உருக்குள் வந்த சீடனும்,
பருத்தி பட்ட பாடுதான் பண்ணிரண்டும் பட்டதே!.
பண்ணிரண்டும் பட்டதே! என்பது 12 ராசிகளைத்தான் கூறுகிறார். இருத்தி வைத்த சற்குரு என்றால் , வலுக்கட்டாயமாக வைப்பது தான் இருத்தி வைத்தல். நமக்குள் சற்குரு வலுக்கட்டாயமாகத் தான் இருக்கிறார். நாம் அறியாவிட்டாலும் அவர் நமக்குள் இருக்கிறார்.
அவரை சீர்பட வணங்க வேண்டும்.. அதை செய்யாமல் அவருக்கு உரு கொடுக்க முற்படுகிறார்கள்.
அவர் இறை . உருக்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்.
நம்முடன் வாழ்ந்து இறையை உணர்ந்தவர்களுக்கு உரு கொடுக்கலாம். அவர்கள் கடவுளர்கள் . இறை வேறு கடவுளர்கள் வேறு . இறைக்கு உரு கொடுக்க முடியாது.
அவர் எங்கும் பரந்து விரிந்த பரம்.
சீர்பட வணங்கத் தான் முடியும்.
அந்த இறைக்கு உருக்கொடுக்க முற்பட்டால் பருத்தி பட்ட பாடுதான் பட வேண்டும் என்கிறார்.
பருத்தி காய் வெடித்து பஞ்சை எடுத்து, அடித்து , திரித்து, நூல் ஆக்கி, துணியாக நெய்வது வரை பருத்தி பட்ட பாடு பெரும் பாடுதான். ஆனால் அது துணியாக , மானம் காக்கும் போதும், சூழ்நிலை காக்கும் போதும் அதன் பட்ட பாடு மறந்து பெருமிதம் அடையும்.
அது போல 12 ராசிகளுக்கு உரு கொடுத்து ஆழ்வார்களாக, அதன் குணாதிசயங்களாக , உண்மைகளை சொன்னாலும், அதன் உண்மை மக்களுக்குச் சென்றடையாமல் பட்டபாடு பருத்தி பட்ட பாடுதான்.
துணி போல ஒரு நாள் அனைவருக்கும் கண்டிப்பாக விளங்கி உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்கிறார்.
இந்த மாதிரி உருக் கொடுத்தவர்களும், அதை நம்பி வந்த சீடனும், பருத்தி அடி வாங்கி நூல் ஆவது போல் பட்டு உணர்வார்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
Arumai