வரும் அமாவாசையிலிருந்து , 11 நாட்கள் கர்ப்போட்ட காலம்.

வரும் அமாவாசையிலிருந்து , 11 நாட்கள் கர்ப்போட்ட காலம்.

வரும் அமாவாசையிலிருந்து , 11 நாட்கள் கர்ப்போட்ட காலம்.

கர்ப்போட்ட தரவுகள் அவரவர் ஊர்களில், குறிப்புகளாக ஒரு note book. ல் குறித்து வைத்துக் கொண்டால், அடுத்த வருடம் 6 மாதம் கழித்து ஆடி – 18- லிருந்து மார்கழி மாதம் பௌர்ணமி வரை தினமும் மழை வரும் நாட்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு, உழவு ஓட்டுவதிலிருந்து அறுவடை செய்வது வரை முன்கூட்டியே திட்டமிடலாம்.

வரும் அமாவாசை சனிக்கிழமையில் வருகிறது. நவம்பர் – 30 மார்கழி – 9.

அன்றிலிருந்து கர்ப்போட்ட குறிப்புகள், நம் தலைக்கு மேல் இருக்கும், மேகத்தை பற்றியும், காற்று போக்கினையும் குறிக்க வேண்டும்.

எடுக்கும் குறிப்புகள் 4 கி.மீ வரை மழை பொழிவுகளை காட்டும்.

11 நாள் கழித்து வைகுண்ட ஏகாதசி அன்று கர்ப்போட்ட குறிப்புகளை வைத்து விடிய விடிய நம் ஊரில் அடுத்த வருடம் என்ன பயிரிடலாம் என விவாதித்து முடிவு செய்து அதி காலை வைகறை பூசை செய்து அவரவர் வீடுகளுக்குச் செல்வோம்.

அந்த கர்ப்போட்ட குறிப்புகள் எடுக்க விடிய விடிய Shift போட்டு அந்தந்த ஊர்களில் குறிப்புகள் எடுப்போம்.

குறிப்புகள் எடுப்பவர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை என்பது வகை வகையாக ஊர் பொது மக்கள் செய்து கொடுப்பார்கள்.

இந்த குறிப்புகள் தொடர்ந்து எடுப்பதற்காக ஊரில் காப்புக்கட்டி , நமது சொந்த விழாக்கள் எதையும் வைத்துக் கொள்ளாமல் , அடுத்த வருட மழைக் குறிப்புகளை 64 விதமான தொழில் கள் செய்பவர்களும் , கலந்து எடுப்பார்கள்.

420 வருடங்களுக்கு முன்பு இப்படித்தான் நம் ஊர்கள் இருந்தது.

இது மார்கழி மாதம் . நாமும் வரும் அமாவாசையிலிருந்து கர்ப்போட்ட குறிப்புகள் எடுப்போம். அடுத்த வருட மழைகளை முன் கூட்டியே அறிவோம் நன்றி.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *