308. உதித்த மந்திரத்தினும், ஒடுங்கும் அக்கரத்தினும்,
மதித்த மண்டலத்தினும், மறைந்து நின்ற சோதி நீ !
மதித்த மண்டலத்துளே மரித்து நீ இருந்த பின்!
சிரித்த மண்டலத்துலே சிறந்ததே சிவாயமே!
உதித்த மந்திரத்தினும், பெருவெடிப்பு எனும், அண்ட மலர்வு உதித்ததுதான். Sound Silent மாதிரி பிரமாண்டமாய் இருந்த அண்டம் ஒடுங்கி ஒடுங்கி ஒன்றும் இல்லாமல் கருத்த்தாக கருந்துளையாக , நிறைகளற்று , அடர் கருப்பாகி மீண்டும் மலர்ந்து மந்திரமாக ஒடுங்கும். அந்த நான்கு கரத்தினும், மதி எனும் நம் சிரசின் மத்தியில் உள்ள மண்டலத்திலும் நீ சோதியாக அறிவாக மறைந்து நின்று இருக்கிறாய் என்கிறார்.
அந்த மதி எனும் நம் சிரசின் மண்டலத்தில் நாம் சமாதி எனும் (அறிவு ஒடுங்கி) மரித்து இருந்தால், அது இருப்பதிலேயே பேரானந்தம் என்கிறார். அதைத்தான் சிரித்த மண்டலம் என்கிறார். ஆனந்தத்திலேயே சிறந்தது பேரானந்தம். அதுதான் சிவாயம் என்கிறார்.
சி – வெப்பம்
வா – காற்று
ய – வெளி
மூன்றும் சேர்ந்ததுதான் அறிவு எனும் சுடர்.
Tags: சிவவாக்கியம்
No Comments