இன்று மார்கழி – 1 Nov-22. வெள்ளிக் கிழமை.
மார்கழி என்பதற்கு சான்று எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் உறைந்து வெள்ளையாக குழகுழ வென்று இருக்கிறது. அதிகாலையில் வெளியே பனி பெய்கிறது. நாய்கள் கூதுகலமாக கூட்டம் கூட்டமாக உலவிக் கொண்டு உள்ளது.
வரும் மார்கழி – 8 – லிருந்து , நவம்பர் 29 – லிருந்து கர்ப் போட்டம் ஆரம்பம் ஆக உள்ளது.
கர்ப்போட்டம் எப்படி கணிப்பது, அதற்கு உண்டான Google XL Sheet தயாரித்து விட்டோம்.
நாளை அதனைப் பகிர்கிறோம்.
போன முறை கர்ப்போட்டம் எடுத்தவர்களுக்குத் தெரியும். நாம் கணித்தபடி மழைகள் அமையவில்லை என்பது.
அதன் காரணம் ஆடி – 18 போல தேதி நிலையானதல்ல மார்கழி கர்ப்போட்டம்.
மார்கழி கர்ப்போட்டம், நிலவின் அமாவாசை பௌர்ணமிக்குத் தக்கவாறு தேதி மாறுபடும்.
இதை மூன்று வருடங்களாக மாறி மாறி அவதானித்து கண்டறிந்துள்ளோம்
அதாவது வைகுண்ட ஏகாதசி தான் கர்ப்போட்ட நாட்களின் முடிவு நாள்.
ஒரு வருடம் கர்ப்போட்டம் அமாவாசையில் ஆரம்பிக்க வேண்டும்.
அடுத்த வருடம் பௌர்ணமியில் ஆரம்பிக்க வேண்டும்.
போன முறை நாம் கர்ப்போட்ட ஆரம்பம் பௌர்ணமியில் ஆரம்பித்து இருக்க வேண்டும்.
ஆனால் நாம் தேதியை நிலையாக அதாவது மார்கழி – 14 என முடிவு செய்து இருந்தோம்.
ஆனால் அது தவறு என உணர்ந்ததால், இந்த முறை அதை சரி செய்து கர்ப்போட்ட ஆரம்பம் அமாவாசையில் ஆரம்பிக்கிறோம்.
எனவே இந்த முறை வரும் அமாவாசைக்கு முதல் நாளே, கர்ப்போட்ட குறிப்புகள் எடுக்க ஆரம்பித்து அமாவாசையிலிருந்து குறிப்புகள் பயன்படுத்துவோம். அனைவரும் தயாராவோம். நன்றி
Tags: திருவிழா
No Comments