307. ஒடுக்குகின்ற சோதியும் முந்திநின்ற ஒருவனும்,
நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே,
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்,
அடுத்து நின்ற அறுமீனோ , அனாதிநின்ற ஆதியே!.
ஒடுக்குகின்ற சோதியும், முந்தி நின்ற ஒருவனும் என்றால் சோதியாகிய சுடர் அனைத்தையும், சுட்டுப் பொசுக்கி ஒடுக்கி விடும் வல்லமை கொண்ட அந்த சோதியை முந்தி நிற்பது வெப்பம் எனும் ஒருவன் என்கிறார். அவர் சூரியனை சொல்கிறார். அந்த அண்ட மையத்தைத்தான் (சிவம்)நடுத்தளத்தில் ஒருவனும் என்கிறார், அவனை நோக்கி அனைத்தும் ஏறி சென்று கொண்டுள்ளது. நம்முடைய சூரியனோடு விடுத்து நின்ற இரண்டு பைரவர்களான இணை சூரியன் களைத்தான், மெய்யினோடு பொய்யுமாய், வெப்பமும் குனிர்ச்சியுமாக,
என்கிறார்.
அறுமீன் எனும் கார்த்திகை நட்சத்திரம், நம் பக்கத்தில் அதாவது அடுத்த புவனமாக நின்று கொண்டுள்ளது. இப்படி அனாதியான சத்தம் (மலர்வு), கருத்து இந்த பால் வெளியான ஆதியில் நின்று கொண்டு உள்ளது என்கிறார். சத்தம் தான் சிவமும் (பொருள்) சக்தியுமாக இந்த அண்டம் எங்கும் விரிந்து பரந்து, ஒடுங்கி கொண்டு உள்ளது என்பதை இந்த பாடலில் கூறுகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments