தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டு

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டு

தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கத்தின் முதல் மாநாட்டுக்கான அடுத்தகட்ட கலந்த ஆலோசனைக் கூட்டம்,06-11-24 அன்று கோவை, கொடிசியா வளாகத்தில் காலை 11.10 மணியளவில் தமிழ்நாடு இயற்கை உழவர்கள் மற்றும் உணவு பாதுகாப்புக்கான மாநாட்டு கலந்தாலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 28பேர் பங்கேற்றனர்.

 

கூட்டத்தின் பேசுபொருள் :

– மாநாட்டு நோக்கம்

– இடம் , நாள்,

– மாநாட்டிற்கான குழு கட்டமைப்பு.

– நிதி நிர்வாகம் ,

– மாநாட்டிற்கான ஆலோசனைக் குழு, செயல்பாட்டு குழு வடிவமைப்பு .,

– மாநாட்டு நிகழ்வரங்கின் வடிவமைப்பு , நிகழ்ச்சி நிரல் மாதிரி வடிவமைப்பு .,

– அடுத்த கட்ட செயல்பாட்டிற்கான ஆன்லைன் கூட்டம் மற்றும் அதற்கான பேசுபொருள் .

அனைவராலும் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

✓ மாநாட்டு தேதி பிப்ரவரி 15 , 16 தேதிகளில் கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள Hall-D , Hall-F தேர்ந்தெடுப்பது என்று உறுதி செய்யப்பட்டது . ( இது குறித்து மாநாட்டு குழு சார்பாக கொடிசியா நிர்வாகத்திடம் பேசி Hall-D , Hall-F உறுதி செய்ய அனுமதி கோரப்பட உள்ளது )

 

✓ மாநாட்டு முதன்மை நோக்கமாக “*இயற்கை உழவர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு மாநாடு*”

 

( *இயற்கை உழவிற்கும் உணவிற்கும் நுகர்விற்க்கும் மக்களின் உரிமைக்கான பாலம்* )

 

மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அனைத்து இயற்கை விவசாயிகளையும் இயற்கை விவசாய அமைப்புகளையும் ஒன்றிணைத்து அனைவரின் பங்கேற்புடன் பலமாக செயல்படுவதுவும் , மாநாட்டுப் பிரகடனம் வாயிலாக அரசுக்கு வலுவான கோரிக்கைகளை முன் வைப்பதுவும் , இயற்கை வேளாண்மை இயற்கை உணவு குறித்த நுகர்வோருக்கான ஆழமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் , இயற்கை விவசாயத்தில் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் , இயற்கை விவசாயத்தின் அடிப்படை தத்துவத்தையும் நுட்பங்களையும் முன்னோடி இயற்கை விவசாயிகள் வல்லுனர்கள் வாயிலாக சிந்தனையை செழுமை செய்யதக்க பயிற்சிகளை உருவாக்குவது என அடிப்படை நோக்கமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது .

 

✓ மாநாட்டிற்கான ஆலோசனைக் குழு செயல்பாட்டு குழு என மண்டல வாரியாக வட்டார வாரியாக மாநாட்டு குழுவை அமைப்பாய் கட்டமைப்பது மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது .

✓ மாநாட்டிற்கான நிதி நிர்வாகம் முன் திட்டமிட்டபடி அகவெளி கணக்கில் தொடரப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வரும் காலத்தில் இயக்கத்தின் பெயரில் பதிவு மற்றும் தனி கணக்கு தொடங்கும் வரை – இது குறித்து மாநாட்டு நிதி குழு ஆவணப்பூர்வமாக உடன்படிக்கை செய்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

✓ மாநாட்டிற்கான ஆலோசனை குழு, செயல்பாட்டு குழு உருவாக்கப்பட்டு வேலை திட்டத்திற்கு ஏற்ப தனித்தனி குழுக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது . ( முன்திட்டமிட்ட மாநாட்டுக்கான குறிப்பிட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில் கூடுதலாக சில பொறுப்பாளர்களையும் இணைத்து மாநாட்டிற்கான வேலை திட்டங்களை சீராய் துவங்குவதற்காகவும் , வரும் 09-11-24 சனிக்கிழமை இணைய வழி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று கலந்தாலோசித்து உறுதி செய்யப்பட உள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

✓ மாநாட்டு நிகழ்வின் நிகழ்வரங்க வடிவமைப்பு , மாதிரி நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்பட்டுள்ளது கீழ்வருமாறு :

மாநாட்டு அரங்க வடிவமைப்பு : Hall-D 5000sq meterல் 1500sq meter மாநாட்டு மேடை இருக்கை பேச்சரங்கமாகவும் (1000 நபர்கள் அமரும் வகையில்) .

மீதமுள்ள 3500sq mtr இயற்கை வேளாண் பொருட்கள் விற்பனை அங்காடிக்காகவும் வடிவமைப்பதெனவும்

நிகழ்வரங்கின் நுழைவுப் பகுதியில் இயற்கை வேளாண் கண்காட்சிக்கான அரங்கங்கள் ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

✓Hall-D அரங்கின் மேல் தளத்தில் அமைந்துள்ள 250 நபர்கள் அமரும் வகையில் உள்ள அரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சி பெற்றார்கள், முன்னோடி இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண் வல்லுனர்களால் நிகழ்த்தப்பட்டு கொள்கை முடிவுகள் வரையறை செய்யபடும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

✓Hall – F உணவரங்கமாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

– மாநாட்டு மாதிரி நிகழ்ச்சி நிரல் :

15-2-2025 சனிக்கிழமை

*காலை 9.30 நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் முன்னோடி இயற்கை விவசாயிகள் , செயற்பாட்டாளர்கள் கொண்டு மாநாடு குத்து விளக்கு ஏற்றுதல் மூத்த இயற்கை விவசாயிகள். செயல்பாட்டாளர்களின் பட திறப்பு ஆகியவற்றுடன் துவக்க உரையாக மாநாட்டு குழு சார்பாக மாநாட்டு நோக்கங்கள் அறிவிக்கப்பட்டு‌ சிறப்பு விருந்தினரின் கருத்துரை வாயிலாக நிகழ்ச்சி தொடரும் .

கருத்துரைகள் , கலை நிகழ்ச்சிகள் , இயற்கை வேளாண் கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண் விற்பனை அரங்கங்களை கொடிசியா நிர்வாகத்தார் திரு.இளங்கோ துவக்கி வைக்கிறார் .

 

– சிறப்பு அழைப்பாளர்களாக :

பட்டியல் தமிழ்நாடு உட்பட தேசிய அளவில் இயற்கை விவசாயிகள் இயற்கை விவசாய வல்லுநர்கள் மற்றும் சூழலியல் செயல்பாட்டாளர்களின் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது . அவை இணையவழி சந்திப்பில் பகிரப்பட்டு ஆலோசித்து மாநாட்டு மையக் குழு கலந்தாலோசித்து உறுதி செய்யப்பட உள்ளது.

– 16-2-25 ஞாயிறு மாலை மாநாட்டு குழு சார்பாக அனைத்து இயற்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் மாநாட்டு பிரகடனம் அறிவிக்கப்படும் .

 

– கடந்த கூட்டங்களில் உறுதிசெய்யபட்ட “தமிழ்நாடு இயற்கை உழவர்கள் கூட்டியக்கம்” என மாநாட்டு குழுவை பதிவு செய்யப்பட்ட அமைப்பாக பதிவு செய்திட தீர்மானிக்கப்பட்டது.

 

மாநாட்டிற்கான அடுத்த கட்ட செயல்பாட்டு வடிவமாக தனித்தனி குழுக்கள் பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்கள் பொறுப்புகள் குறித்து Nov-9 சனிக்கிழமை 7.00pm இணையவழி கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *