306. மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாரு எங்கனில்?
கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும்,
அண்ணலோடு சக்தியும், அஞ்சு பஞ்ச பூதமும்,
பண்ணினோடு கொடுத்து அழிப்பாரோடு ஏழும் இன்றுமே!.
மண்ணில் , இந்த உலகில் வாழும் மனிதர்களும், மீண்டும் பிறப்பெடுக்கக் காத்திருப்போரும், பிறவா வரம் பெற்று விண்ணோடு கலந்தவர்களும், இந்த உலகில் எப்படி வந்தார்கள் என்பதனை சொல்கிறார்.
நம்முடைய கண்களைத் திறந்தால் ஒளி தெரிவது போல், கண்ணும் சோதியும் கலந்து இருப்பது போல், நாதமும் விந்துவும் கலந்து , ஏழாவது சக்கரமான (நீர் வண்ணம்) அண்ணலும் (சிவமும்), முதல் சக்கரமான சக்தியும் (கருப்பு வண்ணம்) மற்றும், ஐந்து (நீர், மண், நெருப்பு, காற்று, ஆகாயம்)| பூதங்களையும் , ஒரு இசையை உருவாக்க பண் எழுதுவது போல, நம் உடல் அமைப்பை உருவாக்கி, அதை வளர்த்து அழித்து, இந்த பாரில் ஏழு சக்கரங்களாக மீண்டும் மீண்டும் இன்று வரை நடந்து கொண்டு இருக்கிறது. இனியும் இதுதான் நடக்கும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments