305. பொங்கியே தரித்த அவ் அச்சு புண்டரீக வெளியிலே,
தங்கியே தரித்தபோது தாது மாது உலையதாம்.
அங்கியுட் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க்
கொம்புமேல் வடிவு கொண்டு குருவிருந்த கோலமே!.
புண்டரீகம் என்றால் தாமரை. கருப்பை இருக்கும் , கருமுட்டை இருக்கும் வெளியை , தாமரை மொட்டுப் போன்ற இதழ்களைத் திறந்து கொண்டு , ஆணின் விறைப் பையிலிடுந்து , பொங்கி எழுந்து, அச்சின் வழியாக , கருமுட்டையில் தரித்த போது, அந்த கருப்பை, தாது நிறைந்த அந்த (மாது) பெண்ணின் உலை அது என்கிறார். அந்த உலையில் அந்த ஒளி பொருந்திய அந்த உயிர் அணுக்களில் ஒன்றுதான் அந்த கருமுட்டையில் தரித்து வளரும். அங்கி என்றால் முழுதும் தாமரை இதழ்களால் மூடி இருந்த அறைக்குள் , அந்த ஒளி பொருந்திய வடிவுகளாய், உயிர் அணுக்களை சரித்த போது, அந்த உயிர் அணுக்கள் , கொம்பு வடிவாக , முருகன் கையில் உள்ள வேலாக, வேலின் முனையில் உள்ள , தலையாக, குருவிருந்த கோலமே! என நமக்குள் சிவாயம் குடி கொண்டு இருக்கும் கோலத்தை உணரச் சொல்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments