304. ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே,
வேதமென்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது.
நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே.
ஏதுமன்றி நின்றது ஒன்றை யான், உணர்ந்த நேர்மையே !.
தமிழ் மறை ஓதுவார்கள், இறைவனைப் பற்றி தமிழில் பாடி ஓதும் போது ஓர் எழுத்தாக சி எனும் மந்திரத்தை இறைவனாக ஓதுவார்கள். அது சரியானதுதான். ஆனால் வேதம் என்ற பெயரில் குண்டத்தில் எழும் சுடரை, இறைவன் என விளம்புவது அல்ல இது. சுடரில் தெரியும் ஒளி தேகமல்ல இறைவன் என்கிறார். இந்த வெளியில் நாதம் எனும் ஒலிதான் வெளியில் நான்கு பூதங்களை, அதாவது காற்று, வெப்பம் , நீர், நிலம் ஆகியவற்றை உருவாக்கி இருக்கிறது என்கிறார். இந்த நான்கு பூதங்களைத்தான் நான்முகன் என்கிறார். மால் என்றால் கருப்பு, அதாவது சக்தி.
நாதம், நான்முகன், மால், நான் எல்லாம் ஒன்றுதான் என்கிறார். அவர் உணர்ந்த நேர்மையை அப்படியே கூறுகிறேன் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments