சிவவாக்கியம் பாடல் 303 – உறங்கிலென் விழிக்கிலென்

சிவவாக்கியம் பாடல் 303 – உறங்கிலென் விழிக்கிலென்

303. உறங்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென் .

சிறந்த ஐம் புலன்களும், திசைத் திசைகள் ஒன்றிலென்,

புறம்பும் உள்ளும் எங்கணும், பொருந்திருந்த தேகமாய் ,

நிறைந்திருந்த ஞானிகாள் , நினைப்பதேது மில்லையே.

இறைவனை அடைய, அல்லது முக்தி அடைய, உறங்கிலென், விழித்திலென், உணர்வு சென்று ஒடுங்கிலென் , என்னுடைய ஐந்து புலன்களும், திசைக் கொன்றாய் செல்வதை ஒன்றினைக்கவில்லை, ஆனால் ஞானிகளாய் இருப்பவர்கள் அவர்கள் உடலின் உள்ளும், புறமும், எங்கனும் அவர்களுடைய உடலை பொருத்தி , பொருந்தி, நிறைந்து, மனதில் ஏதும் நினைக்காமல் இருப்பதனால் தான் அவர்களுக்குள் இருக்கும் பேரறிவு எனும் , இறை இயக்கத்தை உணர்ந்து முக்கி அடைந்துள்ளார்கள் என்கிறார். இப்படி, அப்படி என முயற்சி செய்து அடைவதல்ல முக்தி ஏதும் அற்று, நாமாக நினைப்பதேதும் இல்லாமல் , உள்ளிலுருந்து வழி நடத்தும் இறையை , நம்முடன் உறவாடி, உறையாடுவதை உணர்ந்து சொல்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *