ஐயா வணக்கம்…அருமை ஐயா….நன்றி… 🙏
301. இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றிநின்ற தேதடா? பட்டநாத பட்டரே ?.
இட்ட குண்டம் என்றால், இருக்கு வேதம் என்றால் என்னவென்று கேட்கிறார் என்றால், அதன் உண்மையான அர்த்தம் பட்ட நாத பட்டருக்கு தெரியவில்லை என்று தான் கேட்கிறார்.
குண்டம் வளர்த்து பூசைகள் செய்த காரணம், அதில் உருக்கிப் பிரித்தல் எனும் வேதியல், வெப்பத்தால் ஏற்படும் வேதியல் மாற்றங்கள், ஒரு தனிமம், வேறு தனிமமாக, திடப்பொருள், திரவப் பொருளாகவும், திரவப் பொருள், காற்றாகவும் வேதியல் மாற்றம் பெறுவதைத்தான், உருக்கு வேதம் கூறுகிறது. நம் உடலும் சுக்கிலிருந்து, அதாவது விதைப்பையில், காய்ந்த விதையாக, சுக்காக இருந்த சிவாயம், வெப்பத்தில், இலகி சுக்கிலமாவதைத்தான் , இட்ட குண்டத்தில் உருக்கி இலகி, நடக்கும் வேதியவைக் கூறுவது தான் அந்த சடங்குகள்.
அந்த சுட்ட மட்கலத்தில் சுற்றும் நூல்கள் எனும் சடங்கு, அந்த சுக்கில், நாடி, நரம்புகள் உருவாகி, சதை, எலும்பு, ரத்தம், என உடலாக மாறுவதைத்தான் சுட்ட மட்கலத்தில் சுற்றப்படும் நூல்கள் குறிக்கின்றன என்கிறார்.
ஆண் பெண் இணையும் பொழுது, முட்டி நின்ற தூணில் , சுக்கு இலகி சுக்கிலமாக, முளைத்து எழுந்த சோதியை பற்றி நின்றது சுக்கிலம் எனும் நீர் தான் என்கிறார்.
இதை பட்ட நாத பட்டர் அறிவாரா? அதை அறியாமல் அதை சடங்குகளாக்கி, அதன் உண்மையான தத்துவங்களை மறைத்து , அல்லது தெரியாமல் அறிவியலைப் புறந்தள்ளுகிறார்கள் என்கிறார். 1200 ஆண்டுகளுக்கு முன்பே இந்த பட்ட நாத பட்டர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது புரிகிறது.
ஐயா வணக்கம்…அருமை ஐயா….நன்றி… 🙏
சிவாவாக்கியர் பாடலுக்கு நல்ல தெளிவாக உரை வாழ்த்துக்கள் ஐயா