300. மன விகாரமற்று நீர் மதித்திருக்க வல்லீரேல் !
நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும்.
அனைவரோதும் வேதமும், அகம் பிதற்ற வேணுமேல்,
கனவு கண்டது உண்மை நீர், தெளிந்ததே சிவாயமே!
மன விகார மற்று நீர். என்றால் நம் மனதில் விருப்பு வெறுப்பு இன்றி இந்த உலக வாழ்க்கையை நாம் அனுகினால் , நமக்கு உண்மைத் தன்மை விளங்கும். மெய்ப் பொருளை அறிவோம். அந்த உண்மைகளை மதித்து அதன் படி வாழ்வியலோடு, அறம் சார்ந்த வாழ்வை மதித்து வாழ்ந்தோம் என்றால், அந்த நினைவே இல்லாத , சமாதி நித்தமும் நமக்கு கை கூடும். அதை மணி விளக்கு என்கிறார். மணி என்றால் காலம். நமக்கே நாம் விழித்து இருக்கும் போது, நாம் எங்கே இருக்கிறோம் என்ற நினைவின்றி, காலம் பறந்து , நொடிகளாக , நாட்கள் பறக்கும் என்கிறார்.
நம்மைச் சுற்றியுள்ள அனைவரும், நம் வாழ்வியலில் இது சரி, அது தப்பு , வாழும் விதிகளை வகுத்து ஓதும் வேதமும், நாமும் இது சரியா? அது சரியா? என மனதால், அறியாமல் பிதற்றிக் கொண்டு, தடுமாறி கனவுகளை கண்டு, வழி தேடி ஓடி கொண்டு இருக்கையில், சமாதியாக நினைவில்லாத நினைவில், கலங்கிய நீர் தெளிந்தது போல சிவாயம், என்றால் என்னவென்று, தெளிந்து விடும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
நன்று