சிவவாக்கியம் பாடல் 298 – பூவிலாய ஐந்துமாய்

சிவவாக்கியம் பாடல் 298 – பூவிலாய ஐந்துமாய்

298. பூவிலாய ஐந்துமாய், புணலில் நின்ற நான்கு மாய்,

தீயிலாய மூன்றுமாய், சிறந்த கால் இரண்டுமாய்,

தேயிலாயது ஒன்றுமாய், வேறு வேறு தன்மையாய்,

நீயலாமல் நின்ற நேர்மை யாவர் கான வல்லரே.

பூவிலாயதைந்துமாய் – பூ – என்றால் இந்த பூமி – நிலம் , நிலம் சார்ந்த தாது பொருட்கள், தனிமம், சேர்மம் நிறைந்த – அணுக்களால் ஆன பொருட்களைத்தான் ஐந்தாவது பூதமாக , கண்களில் பார்த்தால் தெரியும் பொருட்களாக , திடமாக இருப்பவைகளை குறிப்பிடுகிறார். மண்பூதமாக, வாசனை நுட்பமாக , இவைகளை ஐந்தாம் நிலையில் உருவானவைகளாக நம் முன்னோர்கள் பகுத்துள்ளார்கள்.

ஐந்தாவதற்கு முன் நான்காவது நிலையில் அனைத்தும் புணலாக – நீராக – தாதுக்கள் கரைந்த நீராக – உருவம் இல்லாமல் , இருக்கும் இடத்திற்கு ஏற்ப வடிவம் மாறும் தன்மையாக , நான்காம் பூதமாக, சுவையின் நுண்மையாக இருப்பதை கண்டார்கள்.

மூன்றாவது பூதமாக வெப்பமாக, தீயாக , சுடராக , தொடு உணர்வாக, தோலில் குளிர்ச்சி, சூடு உணரும் தன்மையாக, பொருட்களின் பண்புகளை மாற்றக்கூடிய தீயலாக இருப்பதை பாடுகிறார்.

கால் என்றால் அசையும், பரவும் காற்றாக இரண்டாம் பூதமாக சிறந்தது என்று பாடுகிறார். உருவமில்லாமல் அருவமாக , இயங்கக் கூடியதாக , கேட்கக்கூடியதாகவும், ஒலியாகவும் , எல்லாப் பொருட்களுக்கும், மூலமாகவும் உள்ளதை குறிப்பிடுகிறார்.

தேயு எனும் வெளியாக , அனைத்தும் இருக்க ஒரு இடமாக முதலாவது பூதமாக, ஆதாரமாக , ஒளியாக, கண்களாக, பார்க்கக் கூடிய தன்மையாக , இடைவெளியாக , தூரம் எனும் அளவாக , முப்பரிமாணமாக இப்படி வெவ்வேறு தன்மைகளில் நின்ற தேர்மை , உன்னைத் தவிர வேறு யாராக இருக்க முடியும், என இறைவனை, இந்த இயற்கையின் மூலமாக இருப்பவனைப் பார்த்த்து கேட்கிறார். இவற்றை எல்லாம் யார் உணர்கிறார்களோ? அவர்கள் வல்லவர்களாவரர்கள் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *