297. உம்பர் வானகத்தினும் , உலக பாரம் ஏழினும்,
நம்பர் நாடு தன்னிலும், நாவல் என்ற தீவினும்,
செம்பொன் மாட மல்குதில்லை அம்பலத்துள் ஆடுவான்.
எம்பிரான் அலாது தெய்வம் இல்லை இல்லை இல்லையே!
உம்பர் வாகைத்தினும் என்றால் சொர்க்கம், அல்லது தேவர்கள் வாழும் இடத்திலும் என்று பொருள், உலக பாரம் ஏழினும் எனில் நம் பூமியில் ஏழு கண்டங்களிலும், உலகில் உள்ள நாடுகளிலும், நாவல் எனும் தீவினும் , நாவாய்கள் வலம் வந்த குமரிக்கண்டத்தினும், செம்பொன் மாடம் என்றால் கோயில்கள் , பெரிதாகவும், செம்பொன்னாள் கட்டிய கோயில்களிலும் எம்பிரான் எனும் தெய்வம் இருக்க மாட்டான். அவன் நம் அம்பலம் எனும் , தலைக்குள் , எம்பிரான் ஆடிக்கொண்டு, உயிர் மூச்சாக உள்ளான். அவனின்றி உலகில் வேறு தெய்வம் இல்லை, இல்லை இல்லை என்கிறார்.
சக்திகளைத் தான் நாம் தெய்வங்களாக வணங்குகிறோம்.
Tags: சிவவாக்கியம்
No Comments