296. மூன்றுபத்து மூன்றையும், மூன்று சொன்ன மூலனே.
தோன்று சேர ஞானிகாள், துய்யபாதம் என் தலை,
என்று வைத்த வைத்தபின், இயம்பும் அஞ்செழுத்தையும்
தோன்ற ஓத வல்லிரேல் ! துய்ய சோதி காணுமே!
மூன்று பத்து என்றால் 3 x 10 = 30 , மூன்றையும் மூன்று
3 + 3 = 6 .
30 + 6 = 36
36 தத்துவங்களை உலகுக்கு உரைத்த திருமூலர் மற்றும் அவர் வழிவந்த ஞானிகாள். என அழைத்து இந்த பிரம்மாண்டமான ஆற்றல், கோடிக்கனக்கான, இந்த பூமி, நிலா, சூரியன் என சுழல வைத்து இயக்கி கொண்டுள்ளவனின் பாதம் என் தலையிலும் வைத்துள்ளான், என்னையும் இயக்குபவன் அவன் தான் எனும் அறிவு புரிவதுதான் , மற்றும் அதன் அறிவியல் புரிதல் கொண்டு இயம்பும் அஞ்செழுத்தையும், உங்களுக்குள்ளே, உணர்ந்து ஓத வல்லீரேல் அந்த தூய்மையான அறிவுச் சுடர் உங்களுக்குள் ஒளிவிடும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
சிறப்பு 👍