கர்ப்போட்ட தரவு படி எங்களுக்கு மழை இல்லைனு தெரிஞ்சாலும் , மழை பதிவுகளை பார்க்கறப்ப கொஞ்சம் நப்பாசையும் அங்காலாய்ப்பும் சேர்ந்து வருகிறது ??
இந்த நிகழ்வுகளுக்குக் காரணம், சனி கோளின் வக்ர (எதிர்புற ) நகர்வும், மாலை நேரம் வெள்ளி மேற்கில் தெரிவதாலும் நடக்கும் நிகழ்வு.
செவ்வாய் மிதுனத்தில் இருக்கிறது.
பூமி இப்பொழுது மீனத்தில் இருக்கிறது. சூரியன் கன்னியில் தெரிவதால் பூமி மீனத்தில் இருக்கிறது.
சனி கும்பத்தில் இருக்கிறது. அதனால் அதன் தாக்கம் பூமிக்கு நடக்கிறது. சனி வக்ரத்தில் இருக்கிறது. அதனால் சனியின் மழை எதிர்ப்பு இல்லாமல் மழை கொடுக்கக் கூடிய வாய்ப்பாக உள்ளது. அதே போல் வெள்ளி துலாமில் உள்ளது.
செவ்வாய் மிதுனத்தில் பூமியிலிருந்து தள்ளி உள்ளதால் மழை தடுப்பு குறைவாக இருக்கும்.
இப்படி கர்ப்போட்ட குறிப்புகளுடன் இந்த வெள்ளி, செவ்வாய், சனி இந்த மூன்று கோள்களின் இருப்பிடத்தையும் கவனத்தில் எடுத்தால் இன்னும் துள்ளியமாக மழைகளை கணிக்க முடியும்.
இந்த அவதானங்கள் சோதிடத்தின் முதல் படி.
இது தெரியாமல் சோதிடத்தில் காரகங்களும், பாவங்களும் புரியாது. மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டி இருக்கும்.
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments