294. மூலமென்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே!
நாலுவேதம் நாவுளே நவின்ற ஞானம் மெய்யுளே!
ஆலம் உண்ட கண்டனும் அரி அயனும் ஆதலால்.
ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லையே.
ஓம் நமசிவாய எனும் மந்திரத்தில் மூலம் என்ற மந்திரம் அ உ ம் என்ற எழுத்துக்கள் நமசிவாய எனும் ஐந்து எழுத்துக்களில் முளைத்தது என்கிறார். நான்கு வேதங்கள் வாய் வழியாக சொற்கள் மூலமாக கடத்தப்பட்டவைதான். அந்த ஞானம் உடல் எனும் மெய் உருவாகி அதில் நாக்கு சுழன்று உருவான சொற்களால் உருவானவைதான். இந்த நான்கு வேதங்களையும் உருவாக்கியவர்கள் மூன்று தமிழ்ச்சங்கங்கள்.
முதல் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி வழி நடத்தியவர் சிவன். அவரைத் தான் ஆலமுண்ட கண்டன் என்கிறார். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை வழி நடத்தியவர் அரி எனும் திருமால். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை வழிநடத்தியவர் அய்யன் எனும் முருகன். நான்கு வேதங்களையும் நவின்ற ஞானம் உடலைப் பற்றி அறிந்த கொண்டதால் தான் என்கிறார்.
இதில் ஓம் எனும் ஓலமென்ற மந்திரம் சிவாயம் அல்லதில்லை என்கிறார்.
அ உ ம் எனும் எழுத்துக்கள் சிவாயத்தைத் குறிக்கின்றது . ஓம் எனும் எழுத்து சிவாயத்தைக் குறிக்காமல் அந்த எழுத்தின் வடிவம் நமக்கு வேறு எதையோ குறிப்பதை குறிப்பால் உணர்த்துகிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments