293. சுற்றுமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவனுமாக நின்றதன்மை யோர்கிலீர்
சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளறிந்திலீர் பிரானிருந்த கோலமே.
சுற்றும் ஐந்து என்றால் ஐந்து சக்கரம், ஆறாவது சக்கரம் , கூடம் ஒன்று என்றால் ஓம் எனும் மூலம் .
சொல் இறந்த ஓர் வெளி என்பது ஏழாவது சக்கரமான பெரிய ஆரம். அங்கு சத்தம் இல்லாத வெளியாக இருக்கும் என்கிறார். இந்த அண்டத்தில் எங்கும் நிறைந்து இருப்பது கண்ணுக்குத் தெரியும் பொருட்கள் (matter) (சிவம்) மற்றும் சக்தி (energy) . சிவம் சக்தி இருவரும் இணைந்த தன்மையை உணர்ந்து கொள்ளுங்கள் என்கிறார்.
நம் உடலில் உள்ள செல்கள், அணுக்களையெல்லாம் கட்டி உடலாக இருப்பது சக்தி தான் என்கிறார். அதைத்தான் சக்தியாவது உம் உடல் என்கிறார். தயங்கு சீவன் உட்சிவம் என்றால் ஒவ்வொரு பொருட்களும் அனுக்களால் ஆனது. அதன் உள்ளே உள்ள எலக்ட்ரான், இடம் மாறுவதால் வெவ்வேறு பொருட்களாக மாறி கண்ணுக்த் தெரியும் ஒளியாக சீவனாக , வெப்பமாகவும், ஒளியாகவும் தெரிவது சிவம் என்கிறார். அதாவது உங்கள் உடல் அடுத்தவருக்கு ஒளியாக பொருளாக , உருவமாக, தெரிவதற்கு காரணம் சிவம் என்கிறார்.
பிரான் இருந்த கோலம் என்றால் அண்ட மலர்வில் முதலில் உருவான பொருள் (சிவம்) காற்று தான். ( Hydrogen, heleom ) இந்த காற்று தான் படிப்படியாக வெவ்வேறு பொருட்களாக உருமாறி இப்பொழுது நம் கண்ணுக்குத் தெரியும் அண்டமாக விரிந்து நம் பூமியில் பரிணாமமாக உயிர்களாக, மனிதர்களாகவும் நடமாட காரணம் அந்த பிராணன் தான் என்கிறார். இதை அறியாமல் இருப்பவர்களை பித்தர்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments