அருமை
292. குண்டலத்து உள்ளே உள்ளே, குறித்தகத்து நாயகன்.
கண்ட வந்த மண்டலம், கருத்தளித்த கூத்தனை,
விண்டலர்ந்த சந்திரன், விளங்குகின்ற மெய்ப்பொருள்,
கண்டு கொண்ட மண்டலம் சிவாயம் , அல்லதில்லையே!.
பூமியைத் தான் குண்டலம் என்கிறார்.
இந்த 12, 760 km விட்டமுள்ள இந்த பூமியின் உள்ளே கிட்டத்தட்ட 8000 K.M. விட்டமுள்ள ஒரு காந்த குண்டு தான் நம்மை , அந்த தொடங்கிய இடத்தை நோக்கிப் பறந்து பின் செல்ல காரணமாக இருக்கிறது. அதைத்தான் குறித்தகத்து நாயகன் என்கிறார்.
கண்ட வந்த மண்டலம் என்றால் நம் பால்வெளியில் வெள்ளை நிறத்தில் 66 திகிரி கோணத்தில் தெரியும் மண்டலம், நாம் அண்டத்தில் வந்த மண்டலம் என்கிறார். அந்த வந்த மண்டலத்தைக் கண்டால், வெடித்துக் கிளம்பிய பொருட்கள் ஆங்காங்கே கூடி ஒன்று சேர்ந்து, கோள்களாகவும், சூரியன்களாகவும், துணைக் கோள்களாகவும் வட்டமடித்துத் திரும்பிக் கொண்டு செல்லக் காரணமான கருமையத்தை அளித்த கூத்தன் தான் அந்த அண்ட மையமான சிவம் என்கிறார்.
விண்டலர்ந்த சந்திரன், என்றால் , சிவத்திலிருந்து விண்டு (பிய்ந்து) அலர்த்த சந்திரன் , அதனுடைய பின் செல்லும், 27 நட்சத்திரம் கொண்ட, வட்டப்பாதை நமக்கு அந்த மெய்ப் பெருளை விளங்க வைக்கிறது என்கிறார். இப்படி இந்த அண்டத்தில் கண்டு கொண்ட மண்டலம் அனைத்தும், சி (வெப்பம்) வா (காற்று) , ய (வெளி) ம் (ஒலி) சிவாயம் அல்லதில்லை என்று சொல்கிறார். அல்லதில்லை என்றால் அதைத் தவிர , அதாவது சிவாயத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
அருமை
வெகு அருமை, ஐயா! 🙏🏽
நட்சத்திரம் – (விண்மீன் ,உடு)
அயற்சொல், தவிர்க்க விழைகிறேன் ஐயா!