சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்

சிவவாக்கியம் பாடல் 291 – சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர்

291. சுக்கிலத்தடியுலே ! சுழித்ததோர் எழுத்துலே!

அக்கரத்தடியுலே! அமர்ந்த ஆதி சோதி நீ !

உக்கரதடியுளே! உணர்ந்த அஞ்செழுத்துளே!

அக்கரம் அதாகியே ! அமர்ந்ததே சிவாயமே!

சுக்கிலம் என்பது ஆண்களின் விதைப் பையிலிருந்த நம் முதுகுத் தண்டு தான் ஒளி பொருந்தி , விதைப்பையில் சுனங்கி இருந்தது , சுக்கிலம் எனும் நீரில் ஊரி உயிர் பெற்று அதே நீரில் நீந்திய படி வால்களாக பெண்களின் கருமுட்டையை சென்று தரிக்கும் . இந்த வால் அறிவன் தான் கற்றதனால் ஆய பயனென் கொள் என்று திருவள்ளுவரும் கூறுகிறார். அந்த சுக்கிலத்தில் நீந்தும் உயிர்களில் உ எனும் எழுத்தில் உள்ள அந்த சுழியம் தான் , அந்த அக்கரம் எனும் எழுத்தின் அந்த சுழியம் தான் நம் அண்டத்தின் மையம். அதுதான் அங்கு அமர்ந்த ஆதி சோதி நீ என்கிறார். அந்த ஆதி சோதியின் ஒரு துளிதான் நம் ஒவ்வொருவரின் உள்ளும் அமர்ந்து இருக்கிறான் என்கிறார்.

உக்கரத்தின் உ வடிவில் அந்த சுழியத்தின் நீட்சியாக இருக்கும் கோடு அஞ்சு எழுத்துக்களால் ஆன , நம் முதுகுத் தண்டின் ஐந்து சக்கரங்களாக ஆனதை உணர முடியும் என்கிறார்.

அக்கரம் அதாகியே நம்முள் அமர்ந்ததே சிவாயமே! என்றால் அந்த அ – வில் உள்ள சுழியமும், கரங்களும், கரங்களில் உள்ள சூரியன்களும், நம் சூரியனில் , நம் பூமியும், பூமியில் உள்ள அனைத்து உயிர்களும், உயிரற்ற பொருட்களும், அனைத்துமே சிவாயம் தான் என்கிறார்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *